"அடியே.. ரத்தி, அக்கினி, கோத்திரி.. யாருமா நீ.." - ரசிகர்களை சுண்டி இழுத்த அசுரன் நடிகை அபிராமி அம்மு..!

 
இயக்குநர் எச்.வினோத் இயக்கிய தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடிகர் கார்த்தியின் அன்புத் தங்கையாக நடித்தவர் அம்மு அபிராமி. இந்த படத்திற்கு பிறகு ராட்ஷசன் படத்தில் அம்மு என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். 
 
பிறகு, அசுரன் படத்தில் நடித்து மிகவும் பிரபலமான அம்மு அபிராமி, அடுத்ததாக மெடிக்கல் கிரைம் திரில்லர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். 
 
படத்தின் பெயர் ‘பேட்டரி’. பேட்டரி படத்தை மணிபாரதி இயக்குகிறார். செங்குட்டுவன் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படம் குறித்து மணிபாரதி கூறும்போது, “உண்மையில் நடந்த சில சம்பவங்களின் அடிப்படையில் இதன் திரைக்கதையை அமைத்து வசனம் எழுதியிருக்கிறார் ரவிவர்மா பச்சையப்பன். 
 
மருத்துவ துறையில் நடக்கும் முறைகேட்டால் ஒரு குடும்பம் எப்படி பாதிக்கப்படுகிறது என்பதை நெஞ்சை பதபதக்கவைக்கும் காட்சிகளாக படமாக்கியுள்ளோம்” என்றார்.
 
சினிமாவில் ஹீரோயின் ஆகி விட்டாலே அடிக்கடி தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட வேண்டும் என்ற விதி நடிகைகளுக்கு உள்ளது. அந்த வகையில், இவரும் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.



அந்த வகையில், அவர் சமீபத்தில்வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள்லைக்குகளை குவித்துவருகிறார்கள்.