"ஊர் காரர்கள் செய்த வேலை.." - வீட்டை விட்டு வெளியே வரவே அச்சப்படும் சாய்பல்லவியின் தங்கை..!


தனது ஊரில் உள்ளவர்கள் செய்த வேலையாள் என் தங்கை வீட்டை விட்டு வெளியே வரக்கூட பெரிதாக ஆர்வம் காட்டுவது இல்லை என நடிகை சாய்பல்லவி கூறியிருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 
 
நடிகை சாய் பல்லவி, பிரேமம் மலையாள படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த படத்தில் அவரது நடன காட்சிகள் ரசிகர்களை கவர்ந்தது. படமும் வெற்றி பெற்றது. 
 
இதையடுத்து தியா படம் மூலம் தமிழுக்கு வந்தார். தனுஷ் ஜோடியாக மாரி-2 படத்தில் நடித்தார். இந்த படத்தில் இடம் பெற்ற ரவுடி பேபி பாடலில் சாய் பல்லவி ஆடிய நடனம் உலக அளவில் பெரிய வரவேற்பை பெற்றது. 

தொடர்ந்து, சூர்யா ஜோடியாக என்.ஜி.கே. படத்தில் நடித்தார். இவர் தற்போது பாவக் கதைகள் என்கிற ஆந்தாலஜி படத்தில் நடித்துள்ளார். இதுதவிர தெலுங்கு படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
 

சாய் பல்லவியின் தங்கை

சாய் பல்லவிக்கு பூஜா என்ற தங்கை இருக்கிறார். பார்க்க அச்சு, அசலாக சாய் பல்லவி போலவே இருப்பவர். அக்காவுடன் பூஜா எடுத்துக் கொள்ளும் பல புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாவதால் இவருக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. 
 
இதனிடையே பேட்டி ஒன்றில் சாய் பல்லவி தனது தங்கை குறித்த சில விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அதில், தன்னை விட நான் தான் அழகாக இருப்பதாக என்னை தங்கை நினைக்கிறார். நான் அவரை விட நிறமாக இருப்பதால் அப்படி நினைக்கிறார். 
 
கண்ணாடியை பார்க்கும் போது எல்லாம் தன்னைப் பற்றியும், என்னுடைய அழகை பற்றியும் தான் பேசுவார். என் தங்கையின் கலரை பலரும் சுட்டிக்காட்டி பேசியதால், அவர் வீட்டை விட்டு வெளியே வரக்கூட பெரிதாக ஆர்வம் காட்டுவது இல்லை. 
 

ஊர் காரர்கள் செய்த வேலை

அவள் சிறுமியாக இருக்கும் போது வீட்டை விட்டு வெளியே வந்தாலே என் ஊர் காரர்கள் விளையாட போறீயா..? ஏற்கனவே நீ கறுப்பு..!? என பலமுறை கூறியுள்ளனர். இதனால், தனது தங்கை பூஜாவின் மனம் மிகவும் பாதிக்கப்பட்டதாக கூறியுள்ளார் சாய் பல்லவி.

"ஊர் காரர்கள் செய்த வேலை.." - வீட்டை விட்டு வெளியே வரவே அச்சப்படும் சாய்பல்லவியின் தங்கை..! "ஊர் காரர்கள் செய்த வேலை.." - வீட்டை விட்டு வெளியே வரவே அச்சப்படும் சாய்பல்லவியின் தங்கை..! Reviewed by Tamizhakam on December 14, 2020 Rating: 5
Powered by Blogger.