"இனியா.. நீ தானா இது...?" - மோசமான உடையில் மொத்தத்தையும் காட்டிய இனியா - அதிர்ச்சியில் நெட்டிசன்ஸ்..!

 
மலையாள படங்களில் நடித்து வந்த இனியா, 'வாகை சூடவா' படம் மூலம் தமிழில் அறிமுகமானார். சற்குணம் இயக்கிய அந்தப் படத்தில் விமல் ஹீரோவாக நடித்திருந்தார். 
 
முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதால் 'அம்மாவின் கைப்பேசி', 'சென்னையில் ஒரு நாள்', 'நான் சிகப்பு மனிதன்', 'மெளனகுரு', 'புலிவால்' போன்ற அடுத்தடுத்த படங்களில் நடித்தார். 
 
திறமையாக நடித்தாலும் இனியாவிற்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்காவில்லை, தமிழ் சினிமாவை விட்டே காணாமல் போனார் இனியா. இறுதியாக இவர் பரத்துடன் பொட்டு என்ற படத்தில் நடித்தார். 
 
மலையாளத்தில் மம்முட்டி, கன்னடத்தில் சிவராஜ்குமார் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டாலும், தமிழில் உரிய இடத்தை பிடிக்க முடியாமல் திணறி வருகிறார் இனியா. 
 
தனது இருப்பை ரசிகர்களுக்கு காட்டிக் கொள்வதற்காக அவ்வப்போது ஸ்டைலிஷ் போட்டோ ஷூட்களை நடத்தி, அந்த புகைப்படங்களை சோசியல் மீடியா பக்கங்களில் பதிவிட்டு வருகிறார். 
 
தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்துள்ள இனியா, ஹாலிவுட் ஹீரோயின்கள் ரேஞ்சுக்கு போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் 'மாமாங்கம்' என்ற மலையாள படத்தில் நடித்திருந்தார் இனியா. 
 
இந்நிலையில், தன்னுடைய முன்னழகு அப்பட்டமாக தெரியும் படி படு மோசமான கவர்ச்சி போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி ரசிகர்களை திணறடித்துள்ளார் அம்மணி. 
 

இதனை பார்த்த ரசிகர்கள், அமைதிப்படை மணிவண்ணன் கணக்காக இனியா.. நீ தானா இது...? என்று ஷாக் மீம்களை பறக்க விட்டு வருகிறார்கள்.