"லிப்-லாக் முத்த காட்சியில் இருந்து இதை சொல்லி தப்பித்தேன்..." - சாய்பல்லவி சர்ச்சை பேச்சு..!


கடந்த, 2018ம் ஆண்டு #MeToo என்ற டேக் மூலம் ஹாலிவுட் நடிகைகள் பலரும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் சீண்டல் குறித்து வெளிப்படையாக கூறினார்கள். இதனால், இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
 
திரையலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த #MeToo இயக்கத்தினால். பல்வேறு துறைகளைச் சேர்ந்த பெண்கள், பாலியல் துன்புறுத்தல்களால தாங்கள் பாதிக்கப்பட்டது குறித்து, சமூக வலைதளங்களில் பகிரங்கமாக வெளியிட்டதே, மீ டூ இயக்கம் என, கூறப்பட்டது. 
 
ஹாலிவுட் நடிகைகள் மட்டும் தான் பாலியல் சீண்டல்களை சந்திக்கிறார்களா..? அப்போ நாங்க மட்டும் என்ன தக்காளி தொக்கா..? என களத்தில்குதித்தனர் இந்திய நடிகைகள்.அதன் பிறகு, மே ஐ கம் இன் என்று கே.ஜி.எஃப் ஹீரோ பாணியில் அதிரடியாக என்ட்ரி ஆனார்கள்தென்னிந்திய நடிகைகள்.

இதில், வைரமுத்து முதல் முருகதாஸ் வரை பல பெயர்கள் டர்ர்ர்ராகின. இப்போது இந்த #MeToo அலை சற்றே அடங்கியுள்ளது. ஆனால், இதனால் தான் நான் எனக்கு நடக்கவிருந்த ஒரு சம்பவத்தை தடுத்தேன் என நடிகை சாய்பல்லவி கூறியிருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 

சாய்பல்லவி லிப்-லாக் எஸ்கேப்
 
இந்த #MeToo-வால் திரைத் துறையினர் முதல், மத்திய அமைச்சர் வரை, பல பிரபலங்களும் இதில் சிக்கினர். இந்நிலையில், அந்த #MeToo இயக்கத்தால், லிப்-லாக் முத்தத்தில் இருந்து தான் தப்பித்ததாக, மாரி 2 உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்த, நடிகை சாய் பல்லவி கூறியுள்ளது, சலசப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
இது குறித்து சாய் பல்லவி கூறிகையில், " ஒரு படத்தில் நான் நடித்தபோது, ஒரு லிப்லாக் முத்தக் காட்சி வந்தது. அந்த காட்சியில் என்னால் நடிக்க முடியாது என கூறினேன். எனினும், இயக்குனர் என்னை வற்புறுத்தினார். 
 
அப்போது என்னுடன் பணியாற்றிய படத்தின் ஹீரோ, எனக்கு ஆதரவாக பேசினார். #MeToo விவகாரத்தை முன்னிறுத்தி அதனை குறிப்பிட்டு அவர் ஆதரவாக பேசினார். அதன்பின், அந்த காட்சியில் நடிக்க, இயக்குனர் என்னை வலியுறுத்தவில்லை என்றார். 
 
ஆனால், அந்த ஹீரோ யாருன்னு சொல்லவே இல்லை.

"லிப்-லாக் முத்த காட்சியில் இருந்து இதை சொல்லி தப்பித்தேன்..." - சாய்பல்லவி சர்ச்சை பேச்சு..! "லிப்-லாக் முத்த காட்சியில் இருந்து இதை சொல்லி தப்பித்தேன்..." - சாய்பல்லவி சர்ச்சை பேச்சு..! Reviewed by Tamizhakam on December 12, 2020 Rating: 5
Powered by Blogger.