என்ன சொல்றீங்க.. நான் அந்த பையனுக்கு அம்மாவா..? - சன்னி லியோன் சுளுக் பதில்..!


பாலிவுட் நடிகர் இம்ரான் ஹஸ்மி, நடிகை சன்னிலியோன் ஆகியோர் பீகார் மாணவனின் ஹால் டிக்கெட்டில் தாய், தந்தை என குறிப்பிடப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
பெரும்பாலும் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் குடும்ப அட்டைகளில் உரிய நபருக்கு பதிலாக பிரபலங்களின் படங்களும்,விலங்குகளின் புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளதை கேள்விபட்டிருக்கிறோம். 
 
ஆனால், இதற்கு உச்சபட்சமாக பீகாரில் இளங்கலை 2ம் ஆண்டு படிக்கும் மாணவனின் ஹால்டிக்கெட்டில் நடைபெற்றிருக்கும் குழப்பம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 
 
அதாவது, மாணவனின் ஹால் டிக்கெட்டில் அவரது தந்தை, பிரபல பாலிவுட் நடிகர் இம்ரான் ஹஸ்மி என்றும், தாய் பாலிவுட் நடிகை சன்னிலியோன் என்றும் அச்சிடப்பட்டிருந்தது. 
 
இருப்பிட முகவரியாக ரெட்லைட் ஏரியாவான சட்டர்புஜ் ஸ்தான் (Chaturbhuj Sthan) எனக் குறிப்பிடப்பட்டிருந்து. இதனை பார்த்த மாணவர் அதிர்ச்சியடைந்துள்ளார். 
 
சமூகவலைதளங்களில் வைரலான இந்த ஹால்டிகெட்டின் ஸ்கிரீன் ஷாட் பீகார் மாநில அம்பேத்கர் பல்கலைக்கழக பேராசிரியர்களிடம் காண்பிக்கப்பட்டது. 
 

எங்கு தவறு நடந்ததுஇதனைப் பார்த்த பேராசிரியர்கள் ஹால்டிக்கெட்டில் இடம்பெற்றுள்ள தகவல் குறித்து உரிய விசாரணை நடத்துமாறு பல்கலைக்கழக பதிவாளர் ராம் கிருஷ்ண தாகூர் உத்தரவிட்டுள்ளார். 
 
அநேகமான, டேட்டா என்ட்ரி செய்யும் நபர் செய்த தவறு தான் இதற்கு காரணமாக இருக்கலாம் என்று தெரிகின்றது. ஹால்டிக்கெட் விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தவறு எங்கு நடந்திருக்கிறது என்பதை அறிய உரிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாக தெரிவித்தார். 
 
மேலும், ஹால்டிக்கெட்டில் இடம்பெற்றுள்ள தகவலுக்கு முழுப்பொறுப்பும் மாணவன் மட்டுமே என்றும், இருப்பினும் முழுமையான விசாரணைக்குபிறகே அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார். முதற்கட்ட விசாரணையில், மாணவனின் பெயர் குந்தன் குமார் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
 

சன்னி லியோன் பதில்

 
அவர் மீனாப்பூர் மாவட்டத்தில் உள்ள Dhanraj Mahto Degree கல்லூரியைச் சேர்ந்தவர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதனிடையே, இணையத்தில் வைரலான மாணவனின் ஹால்டிக்கெட்டிற்கு பதிலளித்துள்ள்ளார் நடிகை சன்னி லியோன்.
 
இந்த மாணவர்கள் சிறப்பானவர்களாக இருக்கிறார்கள். பெரிய கனவு காண்பதற்கான வழி, ஹா ஹா ஹா ஹா' என கூறியுள்ளார். கடந்த ஆண்டு பீகாரில் வெளியிடப்பட்ட இளநிலை பொறியாளர் முதல்நிலை தேர்வு முடிவிலும், சன்னி லியோன் 98.5 விழுக்காடு மதிப்பெண்கள் எடுத்து முதல் இடத்தில் இருப்பதாக பட்டியல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

என்ன சொல்றீங்க.. நான் அந்த பையனுக்கு அம்மாவா..? - சன்னி லியோன் சுளுக் பதில்..! என்ன சொல்றீங்க.. நான் அந்த பையனுக்கு அம்மாவா..? - சன்னி லியோன் சுளுக் பதில்..! Reviewed by Tamizhakam on December 13, 2020 Rating: 5
Powered by Blogger.