"Free-ah விடுனா.. அது ஒரு போதை கையி.." - திரிஷாவை பங்கம் பண்ணும் ரசிகர்கள் - என்ன காரணம்..!
நடிகர் ரஜினிகாந்த் நேற்று டிசம்பர் 12-ம் தேதி தனது 70-வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு திரைபிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.
பிரதமர் மோடி ரஜினிக்கு தெரிவித்த வாழ்த்து பதிவில், அன்புள்ள ரஜினிகாந்துக்கு வாழ்த்துகள். நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட காலம் வாழ வாழ்த்துகிறேன்” என்று தெரிவித்திருந்தார்.
இம்முறை அரசியலுக்கு வருவதை உறுதி செய்ததால், தனது பிறந்தநாளன்று ‘இப்ப இல்லன்னா.. எப்பவும் இல்ல.. என்பதைக் குறிக்கும் வகையில் Now or Never என்று எழுதப்பட்டிருந்த கேக்கை வெட்டி குடும்பத்துடன் பிறந்த நாள் கொண்டாடினார் ரஜினிகாந்த்.
இந்தப் புகைப்படத்தை அவரது மூத்த மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் ட்விட்டரில் வெளியிட ரசிகர்களின் லைக்ஸ்களைக் குவித்து வருகிறது. அதேபோல் ரஜினிகாந்தின் இரண்டாவது மகளான ஐஸ்வர்யா தனது தந்தை முதலாவதாக வாங்கிய கார் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றினார்.
TMU 5004 என்ற எண் கொண்ட அந்தக் காரை ரஜினி இன்று முதல் பராமரித்து வருவது இந்தப் புகைப்படத்தின் மூலம் தெரிய வந்துள்ளது. தற்போது விலையுயர்ந்த சொகுசு கார்களை ரஜினி வைத்திருந்தாலும் முதலில் வாங்கிய காரை இன்னும் அவர் மறக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இது ஒருபக்கம் இருக்க, இந்தியாவின் பிரதமர் முதல் திரைப்பிரலங்கள் வரை பலரும் தலைவருக்கு வாழ்த்துக்கள் கூறி வந்தனர். அந்த வகையில், நடிகை திரிஷாவும் ரஜினிகாந்திற்கு வாழ்த்து கூறியிருந்தார்.
அதில், அவர் "Dear Birthday, Happy Rajinikanth to you" என்று குறிப்பிட்டிருந்தார். இதனை பார்த்து ஷாக்கான ரசிகர்கள். மாஸ்டர் படத்தில் அர்ஜுன் தாஸ் பேசும் "Free-ah விடுனா.. அது ஒரு போதை கையி.." என்று கலாய் மீம்களை வெளியிட்டு வருகிறார்கள்.
"Free-ah விடுனா.. அது ஒரு போதை கையி.." - திரிஷாவை பங்கம் பண்ணும் ரசிகர்கள் - என்ன காரணம்..!
Reviewed by Tamizhakam
on
December 13, 2020
Rating:
