இறப்பதற்கு முன் VJ சித்து வெளியிட்ட கடைசி வீடியோ - கண் கலங்கும் ரசிகர்கள்..!


பிரபலமான சேனலான மக்கள் தொலைகாட்சியில் VJ-வாக வேலையை ஆரம்பித்த சித்து தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர்தான் சித்ரா என்னும் சித்து. 
 
தொலைகாட்சியில் வரும் நிகழ்ச்சிகள், சீரியல்கள் எல்லாம் முன்பை விட எல்லா தரப்பு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் குமரன், கதிர் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 
 
கதிர் – முல்லை கதாபாத்திரத்துக்கு தனி ரசிகர் பட்டாளம் உண்டு. சின்னத்திரை நடிகை என்றாலும் சினிமா நடிகைகளுக்கு இணையாக போட்டோ ஷூட் நடத்தி வந்த இவருக்கு சினிமாவில் நல்ல எதிர்காலம் உண்டு என ரசிகர்கள் பலரும் கூறி வந்தனர். 
 
தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருவதை பார்த்த ரசிகர்கள் இவருக்கு விரைவில் சினிமாவில் என்ட்ரியாக வாழ்த்துக்கள் எனவும் கூறி வந்தனர். இவரும் ஓயாது இந்த கை வந்த கலை என்று டெய்லி ஒரு மூணு நாலு புகைப்படங்கள் வெளியிட்டு வந்தார்.
 
இந்நிலையில், இவர் தற்கொலை செய்து கொண்டார் என்ற தகவல் வெளியாகி அனைவரையும் மலைத்து போக செய்துள்ளது. சோசியல் மீடியாவில் அவ்வளவு துடிப்பாக, சுறுசுறுப்பாக இயங்கும் இவரா தற்கொலை செய்து கொண்டார்...? என்று அதிர்ச்சியுடன் சந்தேகம் எழுப்பி வருகிறார்கள் ரசிகர்கள்.

நேற்று இரவு 10 மணிக்கு கூட தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை சரண்யா துராடி சுந்தர்ராஜுடன் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வீடியோ ஒன்றை ஸ்டேட்டஸாக வைத்துள்ளார் சித்ரா.
 
அந்த வீடியோவில் வழக்கம் போல கலகலப்பாகவே இருக்கும் அந்த நிகழ்ச்சியின் படப்பிடிப்பு முடிந்ததும் இரவு 2 மணி வாக்கில்அருகில்இருந்தஹோட்டல்அறைக்குசென்றுள்ளார்.
 
ஆனால்,காலையில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்ற தகவல் ரசிகர்களின் இதயத்தை கனக்க செய்துள்ளது என்று தான் கூறியாக வேண்டும்.

 
இதோ, நேற்று இரவு 09:40 மணிக்கு அவர் அப்லோட் செய்த கடைசி இரண்டு வீடியோக்கள்.
 


இந்த வீடியோவில் வழக்கம் போல மகிழ்ச்சியாக இருக்கும் சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பதை நம்பவே முடியவில்லை என கண் கலங்கி வருகிறார்கள் அவரது ரசிகர்கள்.