பிதாமகன், உயிர், தனம் உள்பட பல தமிழ் படங்களில் நடித்திருக்கிறார். ஏராளமான தெலுங்கு படங்களிலும் சங்கீதா நடித்திருக்கிறார்.
தமிழ் சினிமாவில் மிக முக்கியமான நடிகையாக திகழ்ந்தவர் நடிகை சங்கீதா.சினிமாவில் முன்னணி நடிகைகளின் இடத்தை பிடிக்க வேண்டும் என்றால் எந்த ஒரு கதாபாத்திரம் கொடுத்தாலும் அதனை எற்று கச்சிதமாக நடிக்க வேண்டும்.
அப்போது தான் முன்னணி நடிகையாக சீக்கிரம் வளர முடியும், ஏதாவது வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்தால் தான் ரசிகர்களின் மனதிலும் நீங்கா இடத்தைப் பிடிக்க முடியும்.
இதனை முழுமையாக புரிந்து கொண்டவர்களில் சங்கீதாவும் ஒருவர் . இவர் 1997-ம் ஆண்டு பூஞ்சோலை என்ற தமிழ் படத்தில் தன்னுடைய 18வது வயதில் கதாநாயகியாக அறிமுகமானார்.
இதுவரை கிட்ட தட்ட 60 படங்களில் நடித்துள்ளார் அம்மணி. ஆரம்ப காலகட்டத்தில் கட்டழகுடன் கவர்ச்சி சிலையாக இருந்த இவருக்கு ரசிகர்கள் ஏராளம்.
பொசு பொசுவென இருக்கும் அவரது புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் சங்கீதா-வா இது என்று வாயை பிளந்து வருகிறார்கள்.






