நடிச்சது 4 படம் தான் - ஆனால், 39 கோடியில் புது வீடு வாங்கிய இளம் நடிகை..!


குழந்தை நட்சத்திரமாக இருந்து, கோலிவுட், டோலிவுட், என மாறி கடைசியாக பாலிவுட் திரையுலகில் செட்டில் ஆனவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி. இவருடைய மூத்த மகள் ஜான்வி கபூர், நடிப்பில் கபூர் கடந்த 2018 ஆம் ஆண்டு ’தடக்’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். 
 
நடிகை ஸ்ரீதேவியின் மகளும் நடிகையுமான ஜான்விகபூர், மும்பையில் பிரபல நடிகரின் வீடருகே ரூ.39 கோடிக்கு வீடு வாங்கி உள்ளாராம். நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்விகபூர். 
 
வெறும் நான்கே படங்களில் நடித்துள்ள நடிகையான இவர் 2018-ம் ஆண்டு தடக் படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். இந்த படம் ‘கைராத்’ என்ற மராத்தி படத்தின் ரீமேக் ஆகும். அதன்பிறகு கோஸ்ட் ஸ்டோரிஸ் மற்றும் குன் ஜான் சக்சேனா: தி கார்கிள் கேர்ள் ஆகிய படங்களில் நடித்துள்ளார். 
 

 
அடுத்து கார்த்திக் ஆர்யன் ஜோடியாக தோஸ்த்தானா-2 என்ற படத்தில் நடிக்கிறார். மேலும் தமிழில் நயன்தாரா நடித்துள்ள கோலமாவு கோகிலா படத்தின் இந்தி ரீமேக்கிலும் ஜான்விகபூர் நடிக்க உள்ளார். 
 
இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற 9-ந்தேதி பஞ்சாப்பில் தொடங்க உள்ளது. ஜான்வி கபூர் இந்நிலையில், நடிகை ஜான்விகபூர் மும்பையில் அமிதாப்பச்சனின் வீடு அருகே ரூ.39 கோடியில் வீடு வாங்கியுள்ளார். 
 
இந்த வீடு மும்பை ஜூகு பகுதியில் ஜூகுவைல் பார்லே குடியிருப்பு திட்டத்தில் அமைந்துள்ளது. இது மும்பையின் மிகவும் ஆடம்பரமான மற்றும் மேல்மட்ட குடியிருப்பு பகுதிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. 
 
இந்த வீட்டை ஜான்வி கபூர் கடந்த டிசம்பர் 10-ந்தேதி பத்திரப்பதிவு செய்தார். அடுக்குமாடி குடியிருப்பின் 14, 15 மற்றும் 16-வது தளங்களில் ஜான்வி கபூரின் வீடு அமைந்துள்ளது. இந்த வீடு 4,144 சதுர அடி பரப்பளவு கொண்டது. 
 
பாலிவுட்டின் முன்னணி நடிகர்கள், அமிதாப்பச்சன் வீடு அருகே இந்த வீடு அமைந்துள்ளது. இந்த குடியிருப்பில் நடிகர்கள் அனில்கபூர், அஜய்தேவ்கான், ஏக்தாகபூர் ஆகியோருக்கும் வீடு உள்ளது. ஜான்வி கபூர் தற்போது லோகண்ட்வாலா பகுதியில் உள்ள வீட்டில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிச்சது 4 படம் தான் - ஆனால், 39 கோடியில் புது வீடு வாங்கிய இளம் நடிகை..! நடிச்சது 4 படம் தான் - ஆனால், 39 கோடியில் புது வீடு வாங்கிய இளம் நடிகை..! Reviewed by Tamizhakam on January 05, 2021 Rating: 5
Powered by Blogger.