உன் புருஷன் எனக்கு - என்னோட **** உனக்கு - காதலனுக்காக 52 வயது பெண் செய்த பலே காரியம்..!


மத்திய பிரதேசம், போபாலில் ஒரு பெண் தன் காதலனை அடைய உன் புருஷன் எனக்கு என்னோட சொத்து உனக்கு என காதலனின் மனைவிக்கு ஒன்றரை கோடி சொத்தை எழுதி கொடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் கேட்பவர்களை முகம் சுழிக்க வைத்துள்ளது.
 

வழக்கு தொடர்ந்த மகள்

 
மத்திய பிரதேசம் போபால் நீதி மன்றத்திற்கு விசித்திரமான வழக்கு ஒன்று விசாரணைக்கு வருகிறது. 16 வயதான சிறுமி ஒருவர் தன் பெற்றோர் அடிக்கடி சண்டை போட்டுக்கொண்டே இருகிறார்கள். 
 
இதனால், வீட்டில் எப்போதும் மோசமான சூழல் நிலவுறது. இதனால், என்னாலும், என்னுடைய தன்கையாலும் ஒழுங்காக  படிக்க முடியவில்லை என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 
 

பெற்றோருக்கு கவுன்சிலிங்

 
சிறுமியின் இந்த குற்றசாட்டை தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதி அந்த சிறுமியின் பெற்றோரை நேரில் ஆஜராக உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து, கோர்ட்டிற்கு வந்த சிறுமியின் பெற்றோருக்கு கவுன்சிலிங் வழங்கப்பட்டது. 
 
இருவருக்கும் திருமணம் ஆகி 18 ஆண்டுகள் ஆகி விட்டது. இந்நிலையில், அவர்களுக்கு 16 மற்றும் 12 வயதில் இரண்டு மகள்கள் இருக்கிறார்கள்.
 
வேறு பெண்ணை காதலிக்கிறேன் 
 
நீதிமன்றத்தில் கவுன்சிலிங் கொடுக்கப்பட்டபோது, 42 வயதான அந்த கணவன் அதிர்ச்சி தகவல் ஒன்றை கூறுகிறார். அதாவது, தன் அலுவலத்தில் வேலை செய்யும் 54 வயதான பெண்ணை எட்டு ஆண்டுகளாக காதலிப்பதாகவும், அவரது கணவர் எட்டு ஆண்டுகளுக்கு முன்பே இறந்து விட்டார். அதனால், விதவையாக இருக்கும் அவருடன் நான் சேர்ந்து வாழ விரும்புவதாகவும் கூறியுள்ளார்.
 
எனக்கு திருமணம் ஆனதில் இருந்தே மனைவிக்கும், தனக்கும் சுமூகமான உறவு கிடையாது எனவும் தெரிவித்துள்ளார். முதலில் இந்த முடிவிற்கு மனைவி சம்மதிக்காததால் இவர்களுக்குள் பிரச்சனை எழுந்துள்ளது. 
 

நான்காவது கவுன்சிலிங்

 
ஏறக்குறைய மூன்று சுற்று கவுன்சிலிங் முடிந்த பிறகு தன்னுடன் வாழ பிடிக்காத கணவருடன் சேர்ந்து வாழ விரும்பவில்லை என்ற முடிவு அவரது மனைவி வந்துள்ளார்.
 
பிறகு, அந்த விதவை பெண் தன் காதலன் மனைவிக்கு சுமார் 60 லட்சம் மதிப்புள்ள வீடும், 27 லட்சம் ரொக்க பணத்தை கொடுப்பதற்கு சம்மதித்துள்ளார். இதனை தொடர்ந்து, மனைவியும் தன் கணவனை விவாகரத்து செய்ய சம்மதித்துள்ளார். 
 

எதிர்காலம்

 
பிள்ளைகளின் எதிர்காலத்திற்கு பணம் தேவை என்பதாலும், நிம்மதியான வாழ்வை வேண்டும் என்பதால் மட்டுமே இந்த முடிவை அவர் எடுத்துள்ளார். பணத்திற்காகவோ அல்லது வசதி வாய்புக்காக ஆசைப்பட்டோ அவர் இப்படி செய்யவில்லை அந்த பெண்ணின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

உன் புருஷன் எனக்கு - என்னோட **** உனக்கு - காதலனுக்காக 52 வயது பெண் செய்த பலே காரியம்..! உன் புருஷன் எனக்கு - என்னோட **** உனக்கு - காதலனுக்காக 52 வயது பெண் செய்த பலே காரியம்..! Reviewed by Tamizhakam on January 05, 2021 Rating: 5
Powered by Blogger.