இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ள தளபதி 65 படத்தில் விஜய்க்கு ஜோடியாக பிரபல நடிகை நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இப்படத்தை தற்காலிகமாக ‘தளபதி 65’ என அழைத்து வருகின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். தற்போது இந்த படத்தின் முதற்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கப்போவது யார் என்கிற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. பூஜா ஹெக்டே இந்நிலையில், பிரபல தெலுங்கு நடிகையான பூஜா ஹெக்டே ‘தளபதி 65’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இவர் ஏற்கனவே தமிழில் 2012-ம் ஆண்டு வெளியான மிஷ்கின் இயக்கிய ‘முகமூடி’ படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் அட்டர் ப்ளாப் ஆகவே ராசியில்லாத நடிகை, என்று பச்சை குத்தப்பட்டார்.இந்த மூஞ்சியெல்லாம் ஹீரோயினா என்று கிண்டல் பேச்சுக்கும் ஆளானார் அம்மணி.
இதனால், தமிழ் சினிமாவை விட்டு துண்டை காணோம் துணியை காணோம் என தெரித்து ஓடினார் அம்மணி. ஆனால், தெலுங்கு, இந்தி படங்களில் பிரபல நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையானார். நடிகை பூஜா ஹெக்டே பிரபாஸுடன் நடித்துள்ள ராதே ஷ்யாம் திரைப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போது, எட்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழுக்கு வரும் பூஜா ஹெக்டே தளபதி படத்தில் ரீ என்ட்ரி கொடுக்கிறார். இது தமிழில் முன்னணியில் இருக்கும் நடிகைகளின் வயிற்றில் புகைச்சலை கிளப்பி விட்டுள்ளது.



