இந்த உடம்பை வச்சிகிட்டு பிகினி உடையா..? - சமீரா ரெட்டி வெளியிட்ட புகைப்படம் - ஷாக் ஆன ரசிகர்கள்..!


இயக்குநர் கெளதம் மேனன் இயக்கத்தில் வெளியான ’வாரணம் ஆயிரம்’ படத்தின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்தவர் நடிகை சமீரா ரெட்டி.'நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை’ பாடலில் அவரை ரசிக்காதவர்களே இருக்க முடியாது. 
 
இந்தப் படத்தைத் தொடர்ந்து, அசல், நடுநிசி நாய்கள், வெடி, வேட்டை ஆகியப் படங்களில் நடித்தார். பின்னர் 2014-ம் ஆண்டு அக்ஷய் வர்தே என்ற தொழிலதிபரை மணந்தார். 
 
இவர்களுக்கு 2015-ம் ஆண்டு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அதன் பிறகு, சென்ற ஆண்டு ஒரு பெண் குழந்தை பிறந்தது. இவர், முதன்முதலாக கர்ப்பமாக இருந்தபோது பிரச்சனை ஏற்பட்டு சமீரா பல மாதங்கள் படுத்த படுக்கையாக இருந்தார். 
 
நல்ல வேளை இரண்டாவது கர்ப்பத்தில் எந்த பிரச்சனையும் இல்லை. அதனால் அவர் மனதுக்கு பிடித்ததை செய்து மகிழ்கிறார். என்ன அதை எல்லாம் சமூக வலைதளங்களில் தெரிவிப்பதால் அவ்வப்போது விமர்சனத்திற்குள்ளாகிறார். 
 
கர்ப்பிணி என்றும் கூட பார்க்காமல் அவரை திட்டுகிறார்கள் நெட்டிசன்கள். முதல் குழந்தை பிறந்த பிறகு தனது உடல் எடை வெகுவாக கூடியதாக அவர் தெரிவித்தார்.
 
பிகினி புகைப்படத்தை வெளியிட்டால் நெட்டிசன்கள் தன்னை கிண்டல் செய்வார்கள், மோசமாக திட்டுவார்கள் என்று தெரிந்தும் அவர் துணிச்சலாக இப்படி செய்துள்ளார். 
 
தன்னுடைய நிறைமாத வயிற்றை காட்டும் விதமாக பிகினி உடையை அணிந்து கொண்டு நீருக்குள் இருந்தபடி இவர் நடத்திய போட்டோ ஷூட் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆனது.
 
 
இந்நிலையில், தன்னுடைய குழந்தைகளுடன் கோவா கடற்கரையில் பிகினி உடையில் விளையாடும் அவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.இதனை பார்த்த ரசிகர்கள், இந்த உடம்பை வச்சிகிட்டு பிகினி உடை தேவையா..? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

இந்த உடம்பை வச்சிகிட்டு பிகினி உடையா..? - சமீரா ரெட்டி வெளியிட்ட புகைப்படம் - ஷாக் ஆன ரசிகர்கள்..! இந்த உடம்பை வச்சிகிட்டு பிகினி உடையா..? - சமீரா ரெட்டி வெளியிட்ட புகைப்படம் - ஷாக் ஆன ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on January 02, 2021 Rating: 5
Powered by Blogger.