"அந்த நடிகரை லவ் பண்ணேன்.. - அவர் திருமணத்தின் போது என் இதயமே நின்று போனது.." - மீனா


முதன்முதலில் சினிமா துறையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்பு ஹீரோயினாக உருவெடுத்து தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களைக் கொள்ளை கொண்டவர் நடிகை மீனா. 
 
தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் என பல மொழிகளில் நடித்து 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். இவரைப்போலவே இவரது மகள் நைனிகா தளபதி விஜயின் தெறி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தமிழ் ரசிகர்களை மிகவும் கவர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
சுமார் 15 வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவில் கலக்கிய இவர் தற்போது மீண்டும் ஒருசில துணை வேடங்களில் நடித்து வருகிறார். தற்போது 42 வயதாகும் நடிகை மீனா ஒரு ஹாட் போட்டோ ஷுட் நடத்தியுள்ளார் . 
 
அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றன . இதனை பார்த்த ரசிகர்கள் பலவிதமாக கமெண்ட் செய்த வண்ணம் உள்ளனர். விரைவில் வெப் சீரிஸ்களில் மீனா நடிக்க உள்ளார். ஏற்கனவே ஒரு வெப் சீரிசில் அவர் ஒப்பந்தம் ஆகியுள்ளார். 
 
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக கலக்கியவர் மீனா. தமிழ் சினிமாவின் டாப் நட்சத்திரங்களான ரஜினி, கமல், விஜயகாந்த், கார்த்திக் உள்ளிட்டோருடன் இவர் ஜோடி சேர்ந்து கலக்கினார். 
 
இவர் தற்போது ரஜினி நடித்து வரும் அண்ணாத்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதில் இவருடன் சேர்ந்து குஷ்பூ, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். இந்நிலையில் மீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு போட்டோவை பகிர்ந்துள்ளார். 
 
பல பேட்டிகளில் பல நடிகர்கள் பற்றி பேசியுள்ள மீனா, ஒரு பேட்டியில் நடிகர் ஹிர்திக் ரோஷனை பற்றி பேசுகையில், அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும்..ஐ லவ் ஹிம்.. அவருடைய திருமணத்தின் போது என் இதயமே நின்று விட்டது.. என்று கூறியிருந்தார்.
 
 
இந்நிலையில், ஹிரித்திக் ரோஷனை சந்தித்த போது எடுத்த புகைப்படத்தை அவர் பகிர்ந்துள்ளார். மேலும், எனது இதயமே நின்று போன ஒரு நாள் இது. என் ஆல் டைம் ஃபேவரைட்டான ஹிரித்திக் ரோஷனை, அவரது திருமணத்துக்கு பிறகு நடந்த கெட் டுகெதர் நிகழ்ச்சியில் சந்தித்தேன். எனவும் அவர் பதிவிட்டுள்ளார்

"அந்த நடிகரை லவ் பண்ணேன்.. - அவர் திருமணத்தின் போது என் இதயமே நின்று போனது.." - மீனா "அந்த நடிகரை லவ் பண்ணேன்.. - அவர் திருமணத்தின் போது என் இதயமே நின்று போனது.." - மீனா Reviewed by Tamizhakam on January 04, 2021 Rating: 5
Powered by Blogger.