வெப்சீரிஸ் பக்கம் கவனம் திருப்பும் நடிகை தமன்னா..!


தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பதிய வைத்துள்ள நடிகை தமன்னா இவர் முதன் முதலில் ‘கேடி’ என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் என்ட்ரி ஆனார். 
 
அதன் பிறகு S.J.சூர்யாவின் ‘வியாபாரி’ ‘கல்லூரி ‘ போன்ற படங்களில் நடித்து வந்தார். தமிழ் சினிமாவில் அவரின் திரையப்பணத்தில் திருப்பு முனையாக கார்த்தியின் ‘பையா ‘ படம் அமைந்தது. அதன் பிறகு அஜித், விஜய், சூர்யா போன்ற தமிழ் சினிமாவின் உச்ச நட்சித்தரங்களுடன் இணைந்து நடித்தார். 
 
அதனை தொடர்ந்து பிரம்மாண்ட சரித்திர படமான பாகுபலி தமன்னாவை புகழின் உச்சத்தில் கொண்டு சேர்த்தது. பாகுபலி படத்திற்கு பிறகு தமன்னாவின் மார்க்கெட் உச்சத்திற்கு சென்றதால் இந்திய சினிமாவின் உச்ச நடிகையாக விளங்கி வருகிறார். 
 
அண்மையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தமன்னா சிகிச்சை பெற்று பூரண குணமடைந்து வீடு திரும்பினார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர் தமன்னா. 
 
சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் இவருக்கு ஈடு இணை எவரும் இல்லை என்பதே உண்மை. அந்த அளவிற்கு தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் இருந்து தற்பொழுது வரையிலும் முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்ததன் மூலம் வெகு விரைவிலேயே அஜீத், விஜய், சூர்யா, விக்ரம் போன்ற முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து தனது மார்க்கெட்டை உயர்த்திக் கொண்டார். 
 
மேலும், தமிழ் சினிமாவில் தற்போது ஒரு ரவுண்டு அடித்துக் கொண்டு வருகிறார் தமன்னா.நடிகை தமன்னா 12 வருடங்களாக சினிமாவில் நடித்து வருகிறார். தற்பொழுது அவருக்கு 29 வயது ஆகிறது. பட வாய்ப்புகள் பற்றி அவர் கூறுகையில், “நான் ஆண்டுக்கு 4, 5 படங்களில் நடித்து வந்தேன். இப்போது அந்த எண்ணிக்கை குறைந்துள்ளது. 
 
மற்றவர்கள்போல் அதிகம் படங்கள் உங்களுக்கு இல்லையே? ஏன்? என்று கேட்கிறார்கள். நான் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நிறைய நடித்துவிட்டேன். இனி அதுபோல் நடிக்க வேண்டாம் என்று தோன்றியது. 
 
சமீபகாலமாக நடிகைகள் போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்களை வெளியிட்டு அடுத்த கட்டத்தை நோக்கி பயணிக்கின்றனர் அது போல சில முன்னணி நடிகைகள் தற்போது பட வாய்ப்பு இல்லாததால் அதனை பின்பற்றி வருகின்றனர். 
 
இதன் முலம் நடிகைகள் ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்களை கவர்ந்து வருகின்றனர்.இந்நிலையில், சினிமா வாய்ப்புகள் குறைந்துள்ளதால், வெப் சீரிஸ் பக்கம் தனது கவனத்தை திருப்பியுள்ளார் நடிகை தமன்னா.

வெப்சீரிஸ் பக்கம் கவனம் திருப்பும் நடிகை தமன்னா..! வெப்சீரிஸ் பக்கம் கவனம் திருப்பும் நடிகை தமன்னா..! Reviewed by Tamizhakam on January 05, 2021 Rating: 5
Powered by Blogger.