மறைந்த நடிகர் முரளியின் மனைவியை பார்த்துள்ளீர்களா..? - இதோ அழகிய புகைப்படம்..!


90 களில் இதயத்திற்கு இதமான காதல் படங்களில் நடித்து ஒட்டு மொத்த தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் நடிகர் முரளி. நடிப்பதற்கு திறமை இருந்தால் மட்டும் போதும், கலர் முக்கியம் இல்லை என, நிரூபித்த ஹீரோக்களில் இவரும் ஒருவர். 
 
ஆரம்பத்தில் பல அவமானங்களை கடந்து பின், திரைத்துறையில் சாதித்த இவருடைய மகன், குடும்பம் பற்றி தெரிந்த பலருக்கும் தெரியாத தகவல் ஒன்று உள்ளது. அது இவருடைய தம்பி டானியல் பாலாஜி பற்றி தான். 
 
முரளிக்கு இவர் கூட பிறந்த தம்பி இல்லை என்றாலும், நடிகர் முரளியின் தந்தையரின் இரண்டாவது மனைவிக்கு பிறந்தவர். தன்னுடைய அண்ணன் திரை துறையில் உச்ச கட்டத்தில் இருந்த நிலையில் கூட திரைப்படங்களில் சாதிக்க வேண்டும் என துடிப்புடன் டானியல் பாலாஜி இருந்தாலும், இதனை யாரிடமும் அவர் வெளிப்படுத்தியதே இல்லை. 
 
பல்வேறு கஷ்டங்களை கடந்து, தமிழ் சினிமாவில் சிறு சிறு கதாப்பாத்திரத்தில் நடித்து பின்பு தான் முன்னணி நடிகர்களுக்கு வில்லனாகும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. 
 
தமிழில் 1984ஆம் ஆண்டு வெளியான பூவிலங்கு திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் நடிகர் முரளி. இதன்பின் பகல்நிலவு, கீந்தஞ்சலி, புதிர், இதயம் என பல திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து முன்னணி நட்சத்திரமானார் முரளி. 
 
கடந்த 2010ஆம் ஆண்டு மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். இவரின் இறப்பு தமிழ் சினிமாவிற்கு மிகப்பெரிய இழப்பை தந்தது. நடிகர் முரளியின் மகன் நடிகர் அதர்வாவை நாம் பார்த்திருக்கிறோம். 
 

 
ஆனால் அவரின் மனைவியை இதுவரை நாம் பார்த்ததில்லை. இந்நிலையில் முதல் முறையாக நடிகர் முரளி அவர் மனைவி சோபாவுடன் இருக்கும் அழகிய புகைப்படம் வெளியாகியுள்ளது.