"ப்ப்பா.. கீர்த்தி சுரேஷா இது..?.." - ஸ்லீவ் லெஸ் கவர்ச்சி உடையில் படகில் துடுப்பு போடும் வீடியோ..!


தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். அவர் நடித்து கடந்த வருடத்தில் தமிழில் 'பெண்குயின்' படமும், தெலுங்கில் 'மிஸ் இந்தியா' படமும் ஓடிடி தளங்களில் வெளியானது. 
 
தற்போது, தமிழில் 'அண்ணாத்த, சாணிக்காயிதம்' ஆகிய படங்களிலும், தெலுங்கில் 'குட்லக் சகி, ரங்தே, ஐனா இஷ்டம் நுவ்வு, சரக்குவாரி பாட்டா' ஆகிய படங்களிலும், மலையாளத்தில் 'மரக்காயர்' படத்திலும் நடித்து வருகிறார். 
 
புத்தாண்டை வரவேற்கும் விதத்தில் ஒரு மலைப்பிரதேசத்தில் இயற்கை அழகை ரசித்துக் கொண்டிருக்கும் விதவிதமான புகைப்படங்களைப் பகிர்ந்து “வருக 2021, வளமும், நலமும், செழிப்பும் உங்கள் ஒவ்வொருவருக்கும் கிடைக்கட்டும்,” என வாழ்த்தியுள்ளார். 
 
நடிகை கீர்த்தி சுரேஷ் இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் பிரபலங்களில் ஒருவர்.இவர் அடிக்கடி தனது செல்லப் பிராணியுடன் இருக்கும் புகைப்படத்தை அடிக்கடி பதிவிடுவார்.
 
சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் தனது நாய்குட்டியுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. 2020 ஆம் ஆண்டு முடியும் நேரத்தில் பிரபலங்கள் அனைவரும் மறக்கமுடியாத நினைவுகளை பதிவிட்டு வருகின்றனர்.
 
 
அந்த வகையில் நடிகை கீர்த்தி சுரேஷ் ஸ்பெயின் நாட்டிற்கு சென்ற போது அங்கு எடுக்கப்பட்ட படகு சவாரி வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
 
 
கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள தெலுங்குப் படமான 'குட்லக் சகி' ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று பேசப்பட்டது. கடந்த வருடம் அவர் நடித்து வெளியான இரண்டு படங்களுமே ஓடிடி ரிலீஸ்தான், இந்த ஆண்டாவது தியேட்டர் வெளியீட்டில் ஆரம்பிப்பாரா அல்லது ஓடிடியில் ஆரம்பிப்பாரா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். 


 
இந்நிலையில், ஸ்லீவ் லெஸ் உடையில் படகில் துடுப்பு போட்டு சவாரி செய்யும் கீர்த்தி சுரேஷின் வீடியோ இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.