பிரபல நடிகர் விஷால், தென்னிந்திய நடிகர் சங்கப் பொதுச் செயலாளராகவும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும் பொறுப்பு வகிக்கிறார்.
அவர் நடிகை வரலட்சுமியை காதலித்து வருவதாகவும் இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்ப தாகவும் செய்திகள் வெளியாயின. நடிகை வரலட்சுமி இதனை மறுத்திருந்தார்.
நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டி முடித்த பிறகுதான் திருமணம் செய்து கொள்வேன் என்று நடிகர் விஷால் கூறியிருந்தார். இந்நிலையில் ஆந்திர தொழிலதிபரின் மகளும் நடிகையுமான அனிஷா ரெட்டியை விஷால் திருமணம் செய்துகொள்ள போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
மேலும் விஷாலுடன் அனிஷா எடுத்துக் கொண்ட சில புகைப்படங்களும் பரவியது. இவர்களது திருமணம் நடிகர் சங்க கட்டிடத்தில் நடைபெறும் எனவும் கூறப்பட்டது.
ஆனால், இவர்களது நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் சில காரணங்களால் திருமணம் நின்று போனது. அனிஷா ரெட்டி தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட்டான அர்ஜூன் ரெட்டி திரைப்படத்தில் சில காட்சிகளில் நடித்துள்ளார்.
இந்நிலையில்,நீச்சல் உடையில் ஸ்கூபா டைவிங் செய்யும் சில புகைப்படங்களை தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார் அம்மணி.




