"நிஜமாவே உங்களுக்கு ரொம்ப பெரிய மனசு.." - நிவேதா தாமஸ் பகிர்ந்த வீடியோ..!


தமிழ் திரையுலகில் பாபநாசம் படத்தில் உலக நாயகன் கமல் ஹாசனுக்கு மகளாகவும், தர்பார் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு மகளாகவும் நடித்து புகழ்பெற்றவர் நிவேதா தாமஸ். 
 
இரண்டு படங்களின் கதையும் இவரை மையமாக வைத்து தான் அமைக்கப்பட்டிருக்கும். அதே போல் இரு படங்களிலும் நிவேதா தாமஸின் நடிப்பு ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. இதனால் இளசுகளின் கனவு கன்னியாக மாறியுள்ளார். 
 
தமிழ், தெலுங்கு, மலையாளம் என பிசியாக நடித்து வரும் நிவேதா தாமஸுக்கு தற்போது அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. அதுவும் அம்மணிக்கு தெலுங்கில் அதிக வாய்ப்புகள் கிடைக்கின்றன. 
 
தற்போது பவன் கல்யாணுடன் ‘வக்கால் சாப்’ என்ற படத்திலும் நிக்கில் சித்தார்த்தாவுடன் ‘சுவாஸா’ என்ற படத்திலும் நடித்து வருகிறார் நிவேதா தாமஸ். திரையுலகில் பெரிதாக கவர்ச்சி காட்டாமல் குடும்ப பாங்காக நடித்து வந்த நிவேதா தாமஸ் சமீப காலமாக வெளியிட்ட சில கவர்ச்சி போட்டோஸ் சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது. 
 

 
பொதுவாக நடிகைகள் என்றாலே சதா சர்வ காலமும் சர்ச்சையான விஷயங்களை மட்டுமே செய்து வருகிறார்கள். ஆனால், அதில் சில நடிகைகள் விதி விலக்காக அவ்வபோது சமூக பிரச்சனைகள் மற்றும் பொது வாழ்வு குறித்த தங்களது ஈடுப்பாட்டை காட்டிக்கொள்ளவும் செய்வார்கள். 
 
அந்த வகையில், ராஜப்பன் என்ற முதியவர் தினமும் படகில் Vembanad ஏரியில் விசை படகில் சென்று குப்பையாக பிளாஸ்டில் பாட்டில்களை சேகரித்து ஏரியை சுத்தப்படுத்தி வருவதையும், பல வருடங்களாக அவர் இந்த சேவையை செய்து வருவதையும் தெரியப்படுத்தியுள்ளார். 
 
அவரின் வீடியோவை அரசு அதிகாரிகள், மற்றும் சமூக நல ஆர்வலர்கள், மக்கள் ஆகியோர் பகிர்ந்து வருகின்றனர். இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார் நிவேதா தாமஸ். 
 
இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், ராஜப்பனை குறிப்பிட்டு நிஜமாவே உங்களுக்கு பெரிய மனசு. இந்த மனசு யாருக்கு வரும் என்று புகழ்ந்து தள்ளி வருகிறார்கள்.