"இந்த நாடும், நாட்டு மக்களும், நாசமா போகட்டும்.." - "பூமி" பட இயக்குனர் கதறல்..! - இது தான் காரணம்..?


நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் என்று பூமி பட இயக்குனர் லக்‌ஷ்மண் சமூக வலைத்தளத்தில் கோபமாக பதிவு செய்திருக்கிறார். லக்‌ஷ்மண் இயக்கத்தில் ஜெயம் ரவி, நிதி அகர்வால் நடிப்பில் வெளியான படம் 'பூமி'. 
 
இப்படம் ஜனவரி 14-ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியானது. விவசாயத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி உருவாக்கப்பட்ட இந்தப் படம், கலவையான விமர்சனங்களைப் பெற்றது. 
 
இந்நிலையில், 'பூமி' படம் பார்த்துவிட்டு ரசிகர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "இதுவரை நான் பார்த்த படங்களில் 'பூமி' போன்ற ஒரு மோசமான படத்தைப் பார்த்ததில்லை. 'சுறா', 'ஆழ்வார்', 'அஞ்சான்', 'ராஜபாட்டை' வரிசையில் இந்த படம் அமைந்துள்ளது. இயக்குநர் லக்‌ஷ்மணுடன் பணிபுரிவதை நிறுத்துங்கள் ஜெயம் ரவி" என்று தெரிவித்தார். 
 
உடனடியாக அவரைப் பின்தொடரும் நண்பர் ஒருவர் , "தற்போது இயக்குநர் லக்‌ஷ்மண் உங்களை பிளாக் செய்வார்" என்று தெரிவித்தார். இதனால் கடுப்பான இயக்குனர் லக்‌ஷ்மண் தனது ட்விட்டர் பதிவில் கோபமான ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். 
 

 
அதில், "சார். நம்ம எதிர்காலத் தலைமுறை நல்லா இருக்க வேண்டும் என்று நினைத்துதான் இந்தப் படம் எடுத்தேன். உங்களுக்காகத்தான் எடுத்தேன். 'ரோமியோ ஜூலியட்' எடுத்த எனக்கு கமர்ஷியல் தெரியாதா? நம் நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் ப்ரோ. நீங்க சூப்பர், ஜெயிச்சிட்டீங்க. நான் தோத்துட்டேன்" இவ்வாறு பதிவு செய்திருக்கிறார்.

"இந்த நாடும், நாட்டு மக்களும், நாசமா போகட்டும்.." - "பூமி" பட இயக்குனர் கதறல்..! - இது தான் காரணம்..? "இந்த நாடும், நாட்டு மக்களும், நாசமா போகட்டும்.." -  "பூமி" பட இயக்குனர் கதறல்..! - இது தான் காரணம்..? Reviewed by Tamizhakam on January 19, 2021 Rating: 5
Powered by Blogger.