சீரியலில் குடும்ப குத்து விளக்காக தோன்றும் நடிகை நித்யா தாஸா இது..? - நம்பவே முடியலையே..! - வைரலாகும் கவர்ச்சி புகைப்படங்கள்..!

 
பிரபல தனியார் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகி வரும், ‘கண்ணான கண்ணே’ சீரியலில் நடிகர் பிரித்விராஜின் இரண்டாவது மனைவியாகவும், ஹீரோயின் நிமேஷிகாவின் சித்தியாகவும் நடித்து வருபவர் தான் நித்யா தாஸ். 
 
மலையாளம் மற்றும் தமிழில் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் நடித்து வருகிறார். மலையாள நகைச்சுவை படமான ‘ஈ பரக்கும் தாலிகாவில்’ 2001 ஆம் ஆண்டில் காயத்ரி / பசாந்தியாக தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார் நித்யா. 
 
இந்தப் படத்தின் மூலம் ஆசியநெட் திரைப்பட விருதுகளில் அந்த ஆண்டின் சிறந்த புதிய பெண் முகம் விருதை வென்றார். அதைத் தொடர்ந்து கே.மது எழுதிய புலனாய்வு திரில்லரான நரிமன் படத்தில் நடித்தார். 
 
2002 ஆம் ஆண்டில், குஜிஜிகூனனில் சிறப்புத் தோற்றத்தில் நடித்தார். கன்மாஷி என்ற படத்தில், வினீத் குமாருடன் இணைந்து கன்மாஷியாக நடித்தார் நித்யா. 2003 ஆம் ஆண்டில், முக்கிய வெற்றிப் படமான பாலேட்டனில் தேவகியாக தோன்றினார். 
 
இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்றது. அதே ஆண்டில் ’சூந்தா’ மற்றும் ’வரும் வருன்னு வன்னு’ ஆகிய படங்களிலும் நடித்தார்.அதன் பின்னர் இன்னும் பல மலையாளப் படங்களில் நடித்த நித்யா தாஸ், பின்னர் 2006 ஆம் ஆண்டில், தமிழ் திரைப்படமான ’மனதோடு மழைக்காலம்’ படத்தில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக இடம்பெற்றார். 
 
அதில் நடிகர் ஷாமின் நெருங்கிய தோழியாக நடித்திருந்தார். 2007-ஆம் ஆண்டு, நகரம் படத்தில் பூங்கொடியாகவும், சூர்ய கிரீடம் என்ற திகில் படத்திலும் நடித்திருந்தார் நித்யா.
 
 
2007-ம் ஆண்டு, அதாவது தனது திருமணத்துக்குப் பிறகு சீரியல்களில் கவனம் செலுத்தத் தொடங்கினார் நித்யா. சூர்யா டிவி-யில் ஒளிபரப்பான ‘ஐய்யப்பனும் வாவரும்’ என்ற சீரியலில் ஆயிஷாவாக தொலைக்காட்சிக்கு அறிமுகமானார். 
 
 
2009-ம் ஆண்டு சன் தொலைகாட்சியில் ஒளிபரப்பான ‘இதயம்’ சீரியல் மூலம் தமிழுக்கும் அறிமுகமானார். தொடர்ந்து சன் டிவி-யில் ‘காற்றினிலே வரும் கீதம்’, ’பைரவி’, ’அழகு’ ஆகிய சீரியல்களில் தமிழில் நடித்தார். 


தற்போது ‘கண்ணான கண்ணே’ சீரியலில் ஹீரோயினுக்கு சித்தியாக பாஸிட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், இளம் வயதில் இவர் எடுத்துக்கொண்ட கவர்ச்சி புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி அவரா இது என்று கேள்வி எழுப்பும் வண்ணம்ரசிகர்கள்மத்தியில் வைரலாகி வருகின்றது.

சீரியலில் குடும்ப குத்து விளக்காக தோன்றும் நடிகை நித்யா தாஸா இது..? - நம்பவே முடியலையே..! - வைரலாகும் கவர்ச்சி புகைப்படங்கள்..! சீரியலில் குடும்ப குத்து விளக்காக தோன்றும் நடிகை நித்யா தாஸா இது..? - நம்பவே முடியலையே..! - வைரலாகும் கவர்ச்சி புகைப்படங்கள்..! Reviewed by Tamizhakam on January 30, 2021 Rating: 5
Powered by Blogger.