ரசிகர்கள் நாவில் எச்சில் ஊற வைத்த ஐஸ்வர்யா ராஜேஷ் - வைரல் போட்டோஸ்..!


காக்கா முட்டை படத்தில் தனது நடிப்புத் திறமையின் மூலம் அனைவராலும் ஈர்க்கப்பட்டனர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். தொடர்ந்து வடசென்னை , கனா , நம்ம வீட்டு பிள்ளை, தர்மதுரை , செக்க சிவந்த வானம், வானம் கொட்டட்டும் போன்ற படங்களில் வித்யாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார்.
 
தமிழ் படங்களை தொடர்ந்து தெலுங்கிலும் நடித்து வருகிறார். கடைசியாக விஜய் சேதுபதியுடன் கபெ ரணசிங்கம் படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். 
 
தற்ப்போது பூமிகா படத்தில் ஹீரோயினுக்கு முக்கியதத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்ப்போது சொல்லவரும் தகவல் என்னவென்றால், ஐஸ்வர்யா ராஜேஷ் திறமையான நடிகை என்பதையும் தாண்டி நல்ல சமயல் செய்து அசத்துவார். 
 
பட ஷீட்டிங்கில் தோசை சுட்ட வீடியோ, ஆண்ட்ரியாவுடன் சேர்ந்து cookies செய்த வீடியோ உள்ளிட்டவரை ஏற்கனவே வெளியிட்டுள்ளார். 
 
இந்நிலையில் தற்ப்போது தான் இதுவரை செய்த சமையல் புகைப்படங்களை கோர்வையாக இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ள ஐஸ்வர்யா ராஜேஷ் " சமையல் எப்போதும் என்னை ஒரு புன்னகையுடன் விட்டுவிடுகிறது! என்னுடைய இந்த பதிவில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் அன்புகள் நிறைந்துள்ளது. 
 

இன்று மாறா படத்தை பார்க்கும்போது எனது எல்லா நினைவுகளையும் நினைவுக்கூற முடிந்தது" என கூறி பதிவிட்டுள்ளார். இதற்கு ரசிகர் ஒருவர் " செம்ம பசியில இருக்கேன்.. எச்சில் ஊருது " என கமெண்ட் செய்துள்ளார்.

ரசிகர்கள் நாவில் எச்சில் ஊற வைத்த ஐஸ்வர்யா ராஜேஷ் - வைரல் போட்டோஸ்..! ரசிகர்கள் நாவில் எச்சில் ஊற வைத்த ஐஸ்வர்யா ராஜேஷ் - வைரல் போட்டோஸ்..! Reviewed by Tamizhakam on January 20, 2021 Rating: 5
Powered by Blogger.