தென்னிந்திய சினிமாவில் தனக்கென ஒரு முக்கியமான இடத்தை பிடித்து, அதை தனது கடினமான உழைப்பால் தக்க வைத்து கொண்டவர் தான் நித்யா மேனன்.
இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். மேலும் நித்யாமேனன் ஒரு ஆங்கிலத் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்ததன் மூலமாக தான் சினிமா உலகில் கால்பதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது நித்யா மேனன் வெப் சீரியஸில் நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறாராம். இந்த நிலையில் நித்யா மேனன் ஒரு பேட்டியில், அவரை முன்னணி மலையாள நடிகரான துல்கர் சல்மான் திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டதாக கூறியிருக்கும் தகவல்கள், தற்போது இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
மலையாளத்தில் முன்னணி இளம் நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் துல்கர் சல்மான். இவரும் நித்யா மேனனும் இணைந்து ‘ஓ காதல் கண்மணி’, ‘100 டேஸ் ஆஃப் லவ்’ போன்ற படங்களில் நடித்துள்ளனர்.
அதோடு, இருவருடைய கெமிஸ்ட்ரியும் படங்களில் செம்மையாக இருப்பதாக அவர்களுடைய ரசிகர்கள் அடிக்கடி கூறுவதுண்டு. இவ்வாறிருக்க, நித்யா மேனன் அளித்துள்ள ஒரு பேட்டியில், துல்கர் சல்மான் நித்யாவை விரைவில் திருமணம் செய்து கொள்ளும்படியும், அதனுடைய முக்கியத்துவத்தையும் பல்வேறு விதங்களில் முயற்சி செய்ததாக குறிப்பிட்டிருக்கிறார்.
இதைப்பற்றி நித்யா மேனன் கூறுகையில், ‘துல்கர் ஒரு நல்ல குடும்பஸ்தர். அவர் என்னிடம் வந்து அவருடைய கல்யாண வாழ்க்கை எவ்வாறு இருக்கிறது என்றும், திருமணம் நம்முடைய வாழ்க்கைக்கு எவ்வளவு முக்கியமான விஷயம் என்பதை பற்றியும் வற்புறுத்தி கூறுவார். சிங்கிளாக இல்லாமல் விரைவில் என்னை திருமணம் செய்து கொள்ளுமாறு பல்வேறு விதங்களில் சமாதானப்படுத்தினார்’ என்று கூறியிருக்கிறார்.



