சினிமா நடிகைகளை ஓரம் கட்டும் சீரியல் நடிகை பிரியங்கா - வாயை பிளந்த ரசிகர்கள்..!

 
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நெடுந்தொடர் 'ரோஜா'. இதில் கதாநாயகியாக நடித்து வருபவர் பிரியங்கா. இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவு கிடைத்து வருகிறது. 
 
வடிவுக்கரசி, நதியா,ராஜேஷ் உள்ளிட்ட பிரபலங்கள் இந்த சீரியலில் நடித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த வருடம் ப்ரியங்காவிற்கும் அவருடைய காதலருக்கு, பெற்றோர் சம்மதத்துடன் நிச்சயதார்த்தம் முடிவடைந்த நிலையில், திருமணம் நடைபெறாமல் இருந்தது. 
 
இதனால், இவருடைய திருமணம் நின்று விட்டதாக பல செய்திகள் உலா வந்தன. இதுகுறித்து தொடர்ந்து மௌனம் சாதித்து வந்த சீரியல் நாயகி ப்ரியங்கா, முதல் முறையாக திருமணம் குறித்து பேசியுள்ளார். 
 
இதுகுறித்து கூறியுள்ள அவர், தன்னுடைய காதலருக்கும், தனக்கும் கடந்த வருடம் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது உண்மைதான். ஆனால் இருவருக்குள்ளும் நிறைய கருத்து வேறுபாடுகள். 
 
 
பல முறை அதுபற்றி பேச நான் முயற்சி செய்தும் அவை அனைத்தும் தோல்வியில் தான் முடிந்தது. ஒரு கட்டத்தில் அவர் வெளிநாட்டிற்கு சென்று விட்டார். நான் தொடர்பு கொண்டபோதும் அவருடன் பேச முடியவில்லை.
 
 
எனவே இனி இந்த திருமணம் நடைபெற வாய்ப்பு இல்லை. திருமணம் நின்று விட்டது என தெரிவித்துள்ளார்.
 
 
இந்நிலையில் சீரியலில் எப்போதும் புடவை கட்டி குடும்ப பெண்ணாக வளம் வரும் இவர் நீண்ட காலத்திற்கு முன்பு அரைகுறை ஆடையோடு எடுத்துக்கொண்ட சில புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.


இவரா இப்படி என்று ரசிகர்கள் வாயடைந்துபோயுள்ளனர்.