ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரேயா. இவர் ரஜினியுடன் நடித்த ‘சிவாஜி’ படம் மூலம் பிரபலமானார்.
அதையடுத்து விஜய்யுடன் ‘அழகிய தமிழ் மகன்’ மற்றும் விக்ரம், தனுஷ், ஜெயம் ரவி, ஜீவா உட்பட பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
ஆனால், தமிழில் இவர் நடித்த பல படங்கள் தோல்வியடைந்ததால், தெலுங்கு மற்றும் இந்தியில் நடிக்க தொடங்கினார். அங்கு இரண்டாவது கதாநாயகி அந்தஸ்த்தில் நடித்து வந்தார்.
இந்நிலையில் இவருக்கு சமீபத்தில்தான் திருமணமானது. இவர் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். திருமணம் செய்துகொண்டு கணவருடன் பார்சிலோனாவில் வசித்து வருகிறார்.
அவ்வப்போது கணவருடன் சில ரொமான்டிக்கான புகைப்படங்களை பதிவிட்டு வருவார். இந்நிலையில், சமீபகாலமாக அவர் கவர்ச்சியாக போஸ் கொடுத்த புகைப்படங்கள் இணையத்தை சுற்றி வருகிறது.
தற்போது, கருப்பு உடை அணிந்து கேரவேன் மேக்கப் ரூமில் கவர்ச்சியாக போஸ் கொடுத்த புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
மேலும், ஒரு காலத்தில் மாஸ்க் இல்லாமல் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தது. ஆனால், இப்போது அதை பற்றி நினைத்துக்கொண்டிருக்கிறோம் என்று தன்னுடைய வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.





