பேண்ட்டை கழட்டி அதை காட்டினார் - பிரபல இயக்குனர் மீது முன்னணி நடிகை புகார்..!


இந்தியாவில் #MeToo இயக்கம் வேகம் எடுத்தபோது பிரபல பாலிவுட் இயக்குநர் சாஜித் கான் மீது நடிகைகள், பெண் பத்திரிகையாளர் என்று பலர் பாலியல் புகார் தெரிவித்தனர். 
 
இந்நிலையில் பிரபல கவர்ச்சி நடிகையான ஷெர்லின் சோப்ராவும் சாஜித் கான் மீது புகார் தெரிவித்துள்ளார்.கடந்த 2005ம் ஆண்டு என் தந்தை இறந்த சில நாட்களில் நான் சாஜித் கானை சந்தித்தேன். 
 
அப்பொழுது அவர் தன்னுடைய பேண்ட்டை கழட்டி அவருடைய அந்த உறுப்பை  காட்டி என்னை தொட்டு ஃபீல் பண்ணு என்று சொன்னார். அது எப்படி இருக்கும் என்று எனக்கு நல்லாவே தெரியும். உங்களின் உறுப்பை ஃபீல் பண்ண நான் இங்கு வரவில்லை என்று அவரிடம் சொன்னேன். 
 

ஏன் முன்பே சொல்ல வில்லை

 
சாஜித் கான் மீது மறைந்த நடிகை ஜியா கானின் சகோதரி பாலியல் புகார் தெரிவித்ததை பார்த்த ஷெர்லின் இப்படி ட்வீட் செய்தார். ஷெர்லினின் ட்வீட்டை பார்த்த ஒருவர் இத்தனை ஆண்டுகள் ஆகி விட்டது. ஆனால், இதை ஏன் முன்பே சொல்லவில்லை என்று கேட்டார். 
 
அதற்கு ஷெர்லினோ, பாலிவுட் சூப்பர் ஸ்டார்கள் அவருக்கு ஆதரவாக பேசுவார்கள். பாலிவுட் மாஃபியா வலிமையானது என்றார்.சாஜித் கான் தன் உறுப்பை தொட்டு ஃபீல் பண்ணச் சொன்னதுடன், தன்னை போன்று வேறு யாருக்கும் இப்படி ஒரு உறுப்பு இருக்கிறதா என்று கேட்டார். 
 
நான் சாஜித் மீது பழி போடவில்லை. இது தான் உண்மை. என் தந்தை பிரேம் சாகர் சோப்ரா இறந்து சில நாட்கள் தான் ஆகியிருந்தது என்பதால் நான் கவலையில் இருந்த நேரம் அது. படம் தொடர்பாக தன்னை சந்திக்க வருமாறு சாஜித் கான் அழைத்தார். 
 

நீங்களே தொட்டுக்கொள்ளுங்கள்

 
அவரின் உறுப்பு பற்றி தான் அந்த சந்திப்பு என்பது எனக்கு அப்பொழுது தெரியாது. நான் தொட மாட்டேன் என்று சொல்லியும் மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார். நான் தொடுவதற்கு பதில் நீங்களே உங்களை தொட்டுக் கொள்ளுங்கள் என்று கூறி விட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டேன் என்று கூறியுள்ளார். 
 
செர்லின் சோப்ராவின் இந்த பேச்சு பாலிவுட்வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர், தமிழில் யுனிவர்சிட்டி என்ற படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பேண்ட்டை கழட்டி அதை காட்டினார் - பிரபல இயக்குனர் மீது முன்னணி நடிகை புகார்..! பேண்ட்டை கழட்டி அதை காட்டினார் - பிரபல இயக்குனர் மீது முன்னணி நடிகை புகார்..! Reviewed by Tamizhakam on January 20, 2021 Rating: 5
Powered by Blogger.