"ஆஞ்ச்.. பூஞ்ச்... சந்தனம் போட்டாச்சு..." - குறையாத கூட்டம் - குவியும் மாஸ்டர் வசூல்.. ! - தமிழ்நாட்டில் மட்டும் எவ்வளவு தெரியுமா..?


கடந்த 2020-ம் ஆண்டு ஏப்ரல் 9ம் தேதி வெளியாக வேண்டியது நடிகர் விஜய் நடிப்பில் உருவான 'மாஸ்டர்' திரைப்படம், கொரோனா தாக்கத்தால் தியேட்டர்கள் மூடப்பட்டதால், ஒன்பது மாதங்கள் கழித்து கடந்த வாரம் ஜனவரி 13ம் தேதி வெளியானது. 
 
கொரோனா தளர்வுகளுக்குப் பிறகு நவம்பர் 10ம் தேதி தமிழ்நாட்டில் தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் மக்கள் தியேட்டர்கள் பக்கம் வரவேயில்லை. அந்த மோசமான நிலையை 'மாஸ்டர்' படம் தான் வந்து மாற்றும் என திரையுலகத்தில் நம்பினார்கள். 
 
அவர்களது நம்பிக்கை வீண் போகவில்லை. எதிர்பார்த்தபடியே 'மாஸ்டர்' படத்திற்கான முன்பதிவுகள் ஆரம்பமான நாளிலிருந்து விறுவிறுப்பாக நடைபெற்றது. நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை வரை பல தியேட்டர்களில் முன்பதிவு முன்னரே நடைபெற்றது. 
 
 
அரசு அனுமதித்த 50 சதவீத இருக்கைகள் ஏறக்குறைய முற்றிலுமாக நிரம்பின. அதிலேயே 'மாஸ்டர்' படம் பெரும் வசூலைக் குவித்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 
ஜனவரி 13 முதல் 17 முடிய ஐந்து நாட்களில் தமிழ்நாட்டில் மட்டும் இப்படம் சுமார் 75 கோடி வசூலைப் பெற்றிருக்கும் என வினியோக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 


 
நேற்று, திங்கள் கிழமை படத்திற்குக் கூட்டம் குறைய வாய்ப்பிருக்கும் என்றார்கள். ஆனாலும், பெரிய அளவில் கூட்டம் குறையவில்லை என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன. 
 
இந்நிலை தொடர்ந்தால் அடுத்த சில நாட்களுக்குள் படம் லாபக் கணக்கில் சேர்ந்துவிடும் என்கிறார்கள். படத்திற்கான விளம்பர செலவுகள் மிகமிகக் குறைவு என்பதால் தயாரிப்பாளருக்கு லாபம் கூடுதலாகவே கிடைக்குமாம். 
 
 
தமிழ்நாட்டைப் போலவே தெலங்கானா, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, வெளிநாடுகள் என வெளியிட்ட இடங்களில் படம் லாபத்தைக் கொடுத்துவிடும். ஹிந்தியில் மட்டும்தான் படம் நஷ்டத்தைக் கொடுக்கும் என்று சொல்கிறார்கள்.

"ஆஞ்ச்.. பூஞ்ச்... சந்தனம் போட்டாச்சு..." - குறையாத கூட்டம் - குவியும் மாஸ்டர் வசூல்.. ! - தமிழ்நாட்டில் மட்டும் எவ்வளவு தெரியுமா..? "ஆஞ்ச்.. பூஞ்ச்... சந்தனம் போட்டாச்சு..."  - குறையாத கூட்டம் - குவியும் மாஸ்டர் வசூல்.. ! - தமிழ்நாட்டில் மட்டும் எவ்வளவு தெரியுமா..? Reviewed by Tamizhakam on January 19, 2021 Rating: 5
Powered by Blogger.