மூன்றாவது முறையாக பிரபல ஹீரோவுக்கு ஜோடியாகும் தமன்னா..! - குஷியில் ரசிகர்கள்..!


தமிழ் சினிமா இயக்குனர்களில் தனித்துவமானவர் இயக்குனர் செல்வராகவன். காதல் கொண்டேனில் ஆரம்பித்த அவரது பயணம் கடைசியாக வெளியான என்.ஜி.கே வரையில் ரசிகர்களால் என்றென்றும் போற்றி பாடி கொண்டாடப்பட்டு வருகிறது. 
 
அதிலும் புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் மாதிரியான படங்களின் மூலமாக சினிமா ரசிகர்களுக்கு கலர் ஃபுல் ட்ரீட் கொடுத்தவர் செல்வராகவன். 2021 புத்தாண்டு தினத்தன்று ஒரு இனிப்பான செய்தியை அவர் பகிர்ந்திருந்தார். 
 
அது ‘ஆயிரத்தில் ஒருவன் - 2’ குறித்த செய்தி தான். இதில் தம்பி தனுஷுடன் இணைய உள்ளதாக தெரிவித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற தனியார் அமைப்பு நடத்திய விருது வழங்கும் விழாவில் நடிகர் தனுஷும், இயக்குனர் செல்வராகவனும் பங்கேற்றிருந்தனர். 
 
அப்போது அவர்களிடம் வைக்கப்பட்ட கேள்விக்கு ஆயிரத்தில் ஒருவர் 2வில் தனுஷின் பங்கு இருக்கும் என சொல்லப்பட்டது. ஆனால் அது என்ன என்பது சஸ்பென்ஸாக இருந்தது. முதல் பக்கத்தில் தனுஷ் ஒரு பாடல் பாடி இருப்பார். 
 
இந்த நிலையில் தான் தனுஷ் இரண்டாம் பக்கத்தில் நடிப்பது உறுதியாகி உள்ளது. பாண்டியர்களிடம் இருந்து காப்பாற்றப்பட்ட இளவரசர் வேடத்தில் தனுஷ் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 
காதல் கொண்டேன், புதுப்பேட்டை மற்றும் மயக்கம் என்ன படத்தை அடுத்து அண்ணனும், தம்பியும் இணைந்து பணியாற்ற உள்ள படம் என்பதால் இதற்கு எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக எகிறியுள்ளது. 
 

 
இது ஒருபுறமிருக்க, மறு பக்கம், இதே கூட்டணியில் உருவாகும் "நானே வருவேன்" படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் நானே வருவேன் படத்தின் பர்ஸ்ட் லுக் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி வைரலானது. 
 
கேங்ஸ்டர் கதையில் உருவாகும் இப்படம் தனுஷின் கேரியரில் இன்னொரு அதிரடியான ஆக்சன் படமாக உருவாகப்போகிறது. இந்நிலையில், இப்படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடிக்க பல நடிகைகளை பரிசீலித்து வந்த செல்வராகவன், இப்போது தமன்னாவிடம் பேசி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 
 
இதற்கு முன்பு தனுசுடன் படிக்காதவன், வேங்கை ஆகிய படங்களில் நடித்துள்ள தமன்னா மூன்றாவது முறையாக நானே வருவேன் படத்தில் அவருடன் இணையப்போகிறார்.