"ஒரே ஒரு சீன் நடிக்கணும்ன்னு கூட்டிட்டு போவாங்க.. - ஆனா.." - வெளிப்படையாக கூறிய ஷகிலா..!

 
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும் ஷகிலா படம் என்றால் ஒரு விதமான எதிர்பார்ப்பு இருக்கும். ஷகிலாவின் பட ரிலீஸின்போது முன்னணி நடிகர்களே படத்தை வெளியிட மாட்டார்கள். 
 

அந்த அளவுக்கு தியேட்டரில் கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதும். இன்று பல வெப்சைட்டுகள் இருந்தாலும் இதற்கெல்லாம் விதை ஷகிலா படம் போட்டதுதான். அப்படிப்பட்ட ஷகிலாவை 17 வயதில் இந்த வட்டத்திற்குள் எப்படி இழுத்து வந்தார்கள் என்ற கதையை கண்ணீர் மல்க கூறியுள்ளார் சகிலா. 
 
ஷகிலா முதன் முதலில் நடித்த படம் ப்ளே கேர்ள்ஸ். இந்த படத்தில் ஷகிலா உடன் சில்க் ஸ்மிதா நடித்திருப்பார். குடும்பத்தின் வறுமை காரணமாக தன்னுடைய மானம் போனாலும் பரவாயில்லை என இந்த படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டாராம் சகிலா. 
 
அப்பாவுக்கு மருந்துக்கு காசு கூட வாங்க முடியாத சூழ்நிலையில் தான் இதில் தள்ளப்பட்டேன் எனவும், நான் படங்களில் நடித்தபோது குடும்பம் நன்றாக இருந்ததைப் பார்த்து சந்தோஷப் பட்டதாகவும் தெரிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் அந்த மாதிரி படங்களில் நடித்தாலும் தயாரிப்பாளர்கள் சரியான சம்பளத்தை கொடுக்காமல் அலைய விடுவார்கள்.
 

மேலும், ஒரே ஒரு படம் நடிக்கணும், ஒரே ஒரு சீன் நடிக்கணும் என அழைத்து செல்வார்கள். ஆனால், ஒரு வாரம் ஷூட்டிங் செய்து அந்த காட்சிகளை நான்கு அல்லது ஐந்து படங்களில் இணைத்து படத்திற்கு விளம்பரம் தேடிக்கொள்வார்கள்.
 
ஆனால், எனக்கு சம்பளம் ஒரு படத்திற்கு மட்டும் தான் வரும். இந்த மாதிரி நான் பல இடங்களில் நஷ்டப்பட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார். ஆனால் இதுவரை தன்னை எந்த ஒரு நடிகரும் தயாரிப்பாளரும் வசியப்படுத்தவில்லை என தெரிவித்துள்ளார். 
 
 
என்னுடைய அனுமதி இல்லாமல் என்னுடைய கிட்ட கூட யாரும் வர முடியாது எனவும் தெரிவித்துள்ளார். என்னதான் ஏ பட நடிகை என முத்திரை குத்தினாலும் அவர்களது வாழ்க்கையிலும் பல கஷ்டங்களில் இருந்துள்ளது. 
 
ருசியாக சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்காமல் ஏமாற்றும் நயவஞ்சகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

"ஒரே ஒரு சீன் நடிக்கணும்ன்னு கூட்டிட்டு போவாங்க.. - ஆனா.." - வெளிப்படையாக கூறிய ஷகிலா..! "ஒரே ஒரு சீன் நடிக்கணும்ன்னு கூட்டிட்டு போவாங்க.. - ஆனா.." - வெளிப்படையாக கூறிய ஷகிலா..! Reviewed by Tamizhakam on January 31, 2021 Rating: 5
Powered by Blogger.