அந்த பழக்கத்தை நிறுத்திவிட்டேன்..! கூச்சமே இல்லாமல் ஓப்பனாக கூறிய கவர்ச்சி நடிகை சோனா..!


தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு என பல மொழி படங்களில் 125க்கும் அதிகமான படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை சோனா. கடந்த இரண்டு வருடத்திற்கு முன், இனி கவர்ச்சியான வேடத்தில் நடிக்க போவதில்லை என தெரிவித்தார். 
 
இதை தொடர்ந்து, நல்ல கதைக்களம் கொண்ட படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார்.தமிழ் சினிமாவில் வலம் வந்த கவர்ச்சி நடிகைகளில் சோனாவும் ஒருவர். 
 
கடைசியாக கடந்த ஆண்டு பிரசாந்த் உடன் ஜானி படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் அவர் நடித்த படங்கள் எதுவும் தமிழில் ரிலீசாகவில்லை. தற்போது நடிகர் பிரதாப் போத்தனுடன் இணைந்து சோனா 'பச்சமாங்கா' என்ற மலையாளப் படத்தில் நடித்துள்ளார். 
 
 
அந்தப் படத்தில் சோனா கவர்ச்சியாக நடித்திருப்பதைப் பார்த்து அவர் ஷகிலா வழியில் கவர்ச்சியாக நடிக்கிறார் என்ற பேச்சு அடிபட்டது. இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்திருக்கும் நடிகை சோனா,"பச்சமாங்கா திரைப்படம் ஒரு கனமான கதையை அடிப்படையாக கொண்ட படம். 
 
இயக்குநர் பாலு மகேந்திரா திரைப்படங்கள் போல பக்கா க்ளாஸியான படம் . அப்படத்தின் ட்ரெய்லரில் என் உடை மற்றும் சிறிது நேர நடிப்பைப் பார்த்து பலர் நான் அதி கவர்ச்சியான நடிகை என்பது போன்ற பிம்பத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். அது உண்மை அல்ல. 
 
கேரளாவில் பெண்கள் எப்படி உடை அணிவார்களோ அதை அப்படியே பிரதிபலிக்க வேண்டும் என்பதால் தான் படத்தில் அப்படியான உடையை அணிந்திருந்தேன்.தற்போதும் மலையாள படங்களில் நடித்துக்கொண்டு தான் இருக்கிறார். 


 
சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, “என்னை பார்த்து பலரும் படங்களில் நடிக்கவில்லையா.? என்று கேட்கிறார்கள். நான் தொடர்ந்து நடித்து வருகிறேன். முதிர்ச்சியான மனநிலையில் இருக்கிறேன் என்று கூறியிருந்தார்.
 
மேலும், பல நடிகைகள் சொல்லவே கூச்சப்படும் ஒரு விஷயம் குடிப்பழக்கம். ஆனால், சோனா நான் குடிப்பழக்கத்தை நிறுத்தி விட்டேன் என்று வெளிப்படையாக குறிப்பிட்டுள்ளார்.

அந்த பழக்கத்தை நிறுத்திவிட்டேன்..! கூச்சமே இல்லாமல் ஓப்பனாக கூறிய கவர்ச்சி நடிகை சோனா..! அந்த பழக்கத்தை நிறுத்திவிட்டேன்..! கூச்சமே இல்லாமல் ஓப்பனாக கூறிய கவர்ச்சி நடிகை சோனா..! Reviewed by Tamizhakam on February 04, 2021 Rating: 5
Powered by Blogger.