கவர்ச்சி காட்ட தொடங்கிய கல்யாணி பிரியதர்ஷன் - அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

 
நடிகை லிசி, இயக்குனர் பிரியதர்ஷன் மகள் கல்யாணி. இவர் 2 வருடத்துக்கு முன்புதான் நடிக்க வந்தார். ‘ஹலோ’ தெலுங்கு படத்தில் அறிமுகமானவர் அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். 
 
தமிழில், சிவகார்த்திகேயன் ஜோடியாக ஹீரோ படத்தில் நடிக்கிறார். கல்யாணியும், நடிகர் மோகன்லால் மகன் பிரணவும் சிறுவயது முதலே பழகி வருகின்றனர். 
 
சிறுவயது நட்பு வாலிப வயசானதும் காதலாக மாறியிருக்கிறது என்று செய்தி பரவுகிறது. பிரணவும் தற்போது படங்களில் நடித்து வருகிறார். கல்யாணி தந்தையும் இயக்குனருமான பிரியதர்ஷன், நடிகர் மோகன்லால் இருவரும் உயிர் நண்பர்கள். 
 
பிரியதர்ஷன் இயக்கத்தில் பல்வேறு படங்களில் மோகன்லால் நடித்திருக்கிறார். இரண்டு குடும்பத்தினரும் அவ்வளவு நெருக்கும். கல்யாணி, பிரணவ் காதலுக்கு இந்த நட்பும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. 
 
பிரணவ்வை காதலிக்கிறீர்களா? என்று கல்யாணியிடம் கேட்டால் அதற்கு நேரடியாக பதில் சொல்லாமல் மறைமுக பதில் அளிக்கிறார். அவர் கூறும்போது, நான் ஒருவரை காதலிக்கிறேன். 
 
எதிர்காலத்தில் அவரை மணப்பேன். எங்கள் குடும்பத்தினருக்கு நான் யாரை காதலிக்கிறேன் என்று தெரியும். எங்களுக்குள் எந்த பிரச்சினையும் இல்லை. அவரது பெயரையும் மற்ற விவரங்களையும் இப்போதைக்கு சொல்ல மாட்டேன் என்று கூறியிருக்கிறார். 
 
 
சினிமாவில் டாப்பில் இருக்கும் நடிகைகளே காதல், கல்யாணம் என்றால் சினிமாவில் நான் இன்னும் சாதிக்க வேண்டியுள்ளது என கூறி மழுப்பி விடுவார்கள்.

 
ஆனால், இன்னும் வளரவே ஆரம்பிக்காத நிலையில்காதலிக்கிறேன்.. கல்யாணம் பண்ணிக்க போறேன் என ஓப்பனாக பேசினார் நடிகை கல்யாணி. இந்நிலையில், கவர்ச்சி களம் புகுந்தால் தான் சினிமாவில் வேலைக்கு ஆகும் என அறிந்து கொண்ட அவர் தற்போது கவர்ச்சி புகைப்படங்களை அப்லோட் செய்து வருகிறார்.

இதனை பார்த்த ரசிகர்கள், நீங்களுமா..? என அதிர்ச்சியில் உள்ளனர்.

கவர்ச்சி காட்ட தொடங்கிய கல்யாணி பிரியதர்ஷன் - அதிர்ச்சியில் ரசிகர்கள்..! கவர்ச்சி காட்ட தொடங்கிய கல்யாணி பிரியதர்ஷன் - அதிர்ச்சியில் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on February 08, 2021 Rating: 5
Powered by Blogger.