மாஸ்டர் படத்தில் நீக்கப்பட்ட தன்னுடைய காட்சி குறித்து "சுரேகா வாணி" என்ன கூறியுள்ளார் பாருங்க..!


மாஸ்டர் படத்தின் நீக்கப்பட்ட காட்சி வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் வெளியான ’மாஸ்டர்’ திரைப்படம் வெளியானது. 
 
மாளவிகா மோகனன் ஹீரோயினாக நடித்திருந்த இந்தப் படத்தில், விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருந்தார். இவர்களுடன் ஆண்ட்ரியா, அர்ஜூன் தாஸ், சாந்தனு, கெளரி கிஷன் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
 
 
எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ் தயாரித்திருந்த இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். பொங்கலுக்கு வெளியான இப்படம் உலகம் முழுவதும் 200 கோடிக்கும் மேல் வசூலித்து பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டாகியிருக்கிறது. 
 
இந்நிலையில், ‘மாஸ்டர்’ படத்தில் நீக்கப்பட்ட காட்சி நேற்று வெளியானது. அதன் ஆரம்ப காட்சியில் ”ரொம்ப பிரஷரான சூழ்நிலையிலும் தோனி கூலா முடிவு எடுக்கிறதால தான், அவரை கேப்டன் கூல்ன்னு நாம கூப்பிடுறோம்” என்கிறார் விஜய். 
 
5 நிமிட நீக்கப்பட்ட மாஸ்டர் படத்தின் இந்த காட்சியில் பெண்களின் உடை குறித்து குறை கூறும் ஒரு பெண்ணிற்கு விஜய் பதில் கூறும் வசனம் உள்ள காட்சியாக உள்ளது. 
 
 
இந்த வசனத்தின் போது குற்றங்கள் அதிகமாக செய்பவருக்கு தண்டனை குறைவாக கொடுத்தால் குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே செல்லும் என்று விஜய் பேசும் பஞ்ச் வசனம் உள்ளது இந்த வசனத்தை அடுத்து அந்த பெண் திருந்தி பெண்கள் குறித்த தனது தவறான அபிப்பிராயத்தை திருத்திக் கொள்வது போன்ற இந்த காட்சி உள்ளது. 


படத்தின் நீளம் காரணமாக நீக்கப்பட்ட இந்த காட்சியை அமேசான் ப்ரைம் வெளியிட்டுள்ள நிலையில் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. இந்நிலையில், இந்த காட்சியில் நடித்திருந்த நடிகை சுரேகா வாணி தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த காட்சி நீக்கப்பட்டது குறித்து தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.
 

அவர் கூறியுள்ளதாவது, இந்த காட்சி படத்தில் இருந்து நீக்கப்பட்டுவிட்டது. ஆனால், தற்போது அமேசான் ப்ரைமில் வெளியாகியுள்ளது. இந்த வாய்பை கொடுத்த லோகேஷ் கனகராஜிற்கு நன்றி, சூப்பர் ஸ்டார் விஜயுடன் நடித்தது மிகவும் மகிழ்ச்சி என கூறியுள்ளார்.

மாஸ்டர் படத்தில் நீக்கப்பட்ட தன்னுடைய காட்சி குறித்து "சுரேகா வாணி" என்ன கூறியுள்ளார் பாருங்க..! மாஸ்டர் படத்தில் நீக்கப்பட்ட தன்னுடைய காட்சி குறித்து "சுரேகா வாணி" என்ன கூறியுள்ளார் பாருங்க..! Reviewed by Tamizhakam on February 08, 2021 Rating: 5
Powered by Blogger.