தமிழில் ‘நெஞ்சில் துணிவிருந்தால், நோட்டா’ ஆகிய இரண்டு படங்களுக்கு பிறகு நடிகை மெஹ்ரீன் பிர்சடா நடித்து சமீபத்தில் ரிலீஸான படம் ‘பட்டாஸ்’. துரை செந்தில்குமார் இயக்கியிருந்த இந்த படத்தில் ஹீரோவாக தனுஷ் நடித்திருந்தார்.
இதில் தனுஷ் அப்பா – மகன் என டபுள் ஆக்ஷனில் நடித்திருந்தார். அப்பா கேரக்டருக்கு ஜோடியாக சினேகாவும், மகன் கதாபாத்திரத்திற்கு ஜோடியாக மெஹ்ரீன் பிர்சடாவும் நடித்திருந்தனர்.
மிரட்டலான வில்லன் வேடத்தில் நவீன் சந்திரா நடித்திருந்தார். விவேக் – மெர்வின் இசையமைத்திருந்த இதற்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்திருந்தார், பிரகாஷ் படத்தொகுப்பாளராக பணியாற்றியிருந்தார்.
இதனை ‘சத்யஜோதி ஃபிலிம்ஸ்’ என்ற நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த படம் ரசிகர்களிடையேவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.
சமீப காலமாக மெஹ்ரீன் பிர்சடா சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்ட வண்ணமுள்ளார்.
தற்போது, லேட்டஸ்ட் ஸ்டில்ஸை மெஹ்ரீன் பிர்சடா தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேரிட்டுள்ளார். இந்தபுகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் என்ன இது கைக்குழந்தைங்க போடுறட்ரெஸ்-ஐ போட்டுக்கிட்டு இருக்கீங்க..? என்று கலாய்த்து வருகிறார்கள்.





