உள்ளத்தை அள்ளித்தா, காதலா காதலா உள்ளிட்ட படங்களில் இவரது நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது. மேலும் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான விஜய், அஜித் படங்களிலும் இவர் நடித்து கலக்கினார்.
இதுமட்டுமின்றி சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக பங்கேற்று வந்த இவர், தற்போது குடும்பத்துடன் அமெரிக்காவில் செட்டில் ஆகியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த தொடையழகி ரம்பா தற்போது குடும்பம் 3 குழந்தைகள் என செட்டில் ஆகிவிட்டார்.
இடையில் கணவரை விவாகரத்து செய்யும் நிலைக்கு வந்த இவர் பிறகு கணவருடன் சேர்ந்து வாழ்வதாக முடிவு செய்து தற்போது கணவருடன் வசித்து வருகிறார். ஒரு காலத்தில் கோலிவுட்டையே புரட்டிப் போட்ட கவர்ச்சி புயல்.
பிரபல அரசியல் வாதி ஒருவரால் பல தொல்லைகளுக்கு உள்ளாகி ஆளை விடுங்கடா சாமி என்று சினிமாவவை விட்டே போய்விட்டார் என்ற பேச்சும் கோடம்பாக்க வட்டாரத்தில் உண்டு.
தமிழ் சினிமாவில் தொடைக்கு பெயர் போனவர் ரம்பா, ஒரு காலத்தில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு சொக்க வைத்தவர் என்றே கூறலாம். இவரின் உண்மையான பெயர் விஜயலட்சுமி.
படவாய்ப்பிற்காக இப்போது எல்லாம் நடிகைகள் தங்களது ஹாட் போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகின்றனர். தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த ரம்பா 10 வருட குடும்ப வாழ்க்கை குறித்து சமீபத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
அப்போது அவர் ‘எனக்கும் என் கணவருக்கும் சில நேரங்களில் சண்டை வரும். நானும் பயங்கரமாக சண்டை போடுவேன். சற்று நேரம் கழித்து, ஒரு காபி போட்டு வந்து வைப்பார்.
அதற்கு பிறகு எனது கோபம் எல்லாம் புஷ்வானம் போல பறந்து போய்விடும். எனக்கு கடவுள் அருமையான குழந்தைகளை கொடுத்துள்ளார். அவர்களோட நான் மகிழ்ச்சியாக இந்த வாழ்க்கையை வாழ்கிறேன் என்று கூறியுள்ளார்.
அது மட்டுமின்றி, மேலும் மீண்டும் தமிழில் நடிப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இப்போது நான் ஒரு தாய். பழையபடி டூயட் எல்லாம் பாடியாட முடியாது. எனக்கேற்றவாறு, நல்ல கதாபாத்திரங்கள் கிடைத்தால் பார்க்கலாம் என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தன்னுடைய சமீபத்திய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள் ஆள் அடையாளமே தெரியாம மாறிட்டாரே என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.






