"எனக்கு என்ன வேணும்ன்னு உனக்கு தெரியுமா..??" - ஆடை படத்தை மிஞ்சிய கவர்ச்சியில் அமலாபால் - ரசிகர்கள் அதிர்ச்சி..!


தெலுங்கு சினிமாவின் 4 முன்னணி இயக்குனர்கள் ஒன்று கூடி ” லஸ்ட் ஸ்டோரீஸ்” வெப் தொடரின் தெலுங்கு ரீமேக்கான “பிட்ட கதலு” தொடரை இயக்கியுள்ளனர். 
 
பாலிவுட் சினிமாவின் முன்னணி இயக்குனர்களான ஜோயா அக்தர், அனுரக் காஷ்யப், கரண் ஜோஹர் மற்றும் திபாகர் பானர்ஜி இணைந்து இயக்கிய லஸ்ட் ஸ்டோரீஸ் அமோக வெற்றி பெற்றது அனைவரும் அறிந்ததே. 
 
அந்த தொடரின் மூலம் தான் வெப்சீரிஸ்களின் ஆதிக்கம் இந்தியாவில் அதிகரிக்கவும் ஆரம்பித்தது. 
 
இந்நிலையில் தற்போது தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனர்கள் 4 பேர் அமலா பால், ஸ்ருதி ஹாசன், ஜகபதி பாபு, ஈஷா ரெப்பா மற்றும் லக்‌ஷ்மி மஞ்சு ஆகியோரை வைத்து உருவாக்கியுள்ள பிட்ட கதலு ட்ரெய்லரை யூடியூபில் வெளியிட்டுள்ளனர். 
 
காதல், துரோகம் என அத்தனை உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தும் விதத்தில் உருவாகியுள்ள இந்த தொடர் வருகிற காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 19ம் தேதி நெட்பிலிக்சில் வெளியாவது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த ட்ரெயிலரின் ஆரம்பத்திலேயே "எனக்கு என்ன வேணும்ன்னு உனக்கு தெரியுமா..? என கூறி படு மோசமான படுக்கையறை காட்சிகளில் நடித்துள்ள அவரது கிளிப்புகள் கோர்கப்பட்டுள்ளன.
 

ஆடை படத்தையும் மிஞ்சிய அமலாபாலின் கவர்ச்சியை பார்த்த ரசிகர்கள் அதிர்ந்து போயுள்ளனர்.

Advertisement

கருத்துரையிடுக

0 கருத்துகள்