கிளாமரா இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமா டா... - ட்ராண்ஸ்ப்ரண்ட் உடையில் பட்டாஸ் பட ஹீரோயின்..!


தெலுங்கு, பஞ்சாபி, ஹிந்தி & தமிழ் என பல மொழிகளில் மெஹரின் நடித்து வருகிறார். மெஹரின் தமிழில் முதல் படமாக சுசீந்திரன் இயக்கிய நெஞ்சில் துணிவிருந்தால் படத்தின் மூலம் அறிமுகமானார்.
 
நெஞ்சில் துணிவிருந்தால் படத்தை தொடர்ந்து விஜய் தேவர்கொண்டா நடித்த நோட்டா படத்திலும் நடித்து இருக்கிறார். இதன் பிறகு, தனுஷ் நடித்த பட்டாஸ் படத்தில் அவருக்கு ஹீரோயினாக நடித்திருந்தார். 
 
இந்த படத்தின் முதல் பாதியில் இவருக்கு ஹீரோவுக்கான இணையான ஸ்க்ரீன் ஸ்பேஸ் கொடுக்கப்பட்டது. இதனால், தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நன்கு பிரபலமானார் அம்மணி.
 
சமீபத்தில் தமிழ் படங்களில் நடிப்பது குறித்து ஒரு பேட்டியில் பேசிய அவர், இப்போதுதான் தமிழில் பேசுவதற்கு கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக்கொண்டு வருகிறேன். விரைவில் தமிழில் பேசுவேன். 
 
எனக்குப் பிடித்த நடிகை என பல பேர் உள்ளனர். இருப்பினும் இவர்களுள் நயன்தாராவை எனக்கு கொஞ்சம் அதிகமாகவே பிடிக்கும். பட்டாஸ் படத்துக்கு கிடைக்கும் வரவேற்பை வைத்து புதிய படங்களை ஒப்புக்கொள்வதற்கு முடிவு செய்துள்ளேன். 
 
வாய்ப்புகளை ஒப்புக்கொள்ளும் விஷயத்தில் அவசரப்படாமல் நிதானமாக முடிவெடுக்க உள்ளேன். தெலுங்கில் ஆக அதிகமாக 16 படங்களில் நடித்துள்ளேன். பஞ்சாபி, ஹிந்தி மொழிப் படங்களிலும் நடித்துள்ளேன். 
 
இப்போதைக்கு நடிப்பதில் மட்டுமே ஆர்வம் காட்டிவருகிறேன். நல்ல நடிகை என பெயர் எடுக்கவேண்டும். மற்ற எதிலும் என் கவனத்தை துளியும் சிதறவிட விரும்பவில்லை. 
 
தமிழ் ரசிகர்களின் அன்பை வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை. நிறைய தமிழ் படங்களில் நடித்து, அவர்களின் அன்புக்குப் பாத்திரமாக இருக்கவேண்டும் என்பதே எனது ஆசை என்று கூறியுள்ளார்.
 


சமீப காலமாக அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது ட்ரான்ஸ்ப்ரண்டான உடையில் போஸ் கொடுத்துள்ளார். இதில், அம்மணியின் அழகு இலை மறை காய் மறையாக தெரிவதை பார்த்த ரசிகர்கள் கிளாமரா இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமாடா என்று புலம்பி வருகிறார்கள்.