மஞ்சக்காட்டு மைனா காயத்ரி ஜெயராம் இப்போ எப்படி இருக்கார் பாருங்க..! - ஷாக் ஆகிடுவீங்க..!


தமிழ் சினிமாவில் மனதை திருடிவிட்டாய் என்ற படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை காயத்ரி ஜெயராமன்.
 
அதனை தொடர்ந்து அவர் ஏப்ரல் மாதத்தில், வசீகரா, ஸ்ரீ போன்ற திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்தார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.

பின்னர் 2003-ம் ஆண்டு "வசீகரா" திரைப்படத்தில் கௌரவ தோற்றத்தில் நடித்துள்ளார். நீண்ட இடைவேளைக்கு பின் இவர் பல தொலைக்காட்சி தொடர்களிலும், தொகுப்பாளனியாகவும் பணியாற்றிய இவர், சன் தொலைக்காட்சியில் "நந்தினி" நாடக தொடரின் மூலம் மீண்டும் தமிழ் திரையுலகில் அனைவரின் கவனத்தை ஈற்று அறியப்பட்டார்.
 
 
தொடர்ந்து சரியான படவாய்ப்புகள் கிடைக்காத நிலையில் நடிகை காயத்ரி ஜெயராமன் ஆழ்கடலுக்குள் நீச்சலடிக்கும் ஸ்கூபா டைவிங் கற்று பயிற்சியாளராக பணியாற்றினார்.
 
 
இந்நிலையில் அவர் ரிசார்ட்டின் உரிமையாளரான சமீத் என்பவரை இரு ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் ஸ்ரீ படம் குறித்து பேசுகையில், ஸ்ரீ படத்தில் எனக்கு இயக்குனர் சொன்ன கதை ஒன்று. ஆனால், படமாக்கியது ஒன்று. 
 
 
நான் அந்த படத்தில் ஒரு சில காட்சிகள் மட்டுமே வருவேன். என் வாழ்க்கையிலேயே நான் செய்த பெரிய மிகப்பெரிய தவறு ஸ்ரீ படத்தில் நடித்தது தான் என கூறியுள்ளார். இவர் இளம் வயதிலிருந்தே மருத்துவம் படிப்பதற்கு ஆர்வமாக இருந்தாராம். 
 
 
பன்னிரண்டாம் வகுப்பில் 96% மார்க்கு பெற்றிருந்தாலும் இவருக்கு மருத்துவத்தில் இடம் கிடைக்கவில்லையாம். இதனால் சென்னையில் உள்ள எஸ்ஆர்எம் கல்லூரி யில் பிசியோதெரபி படித்து இருக்கிறார். 
 
 
ஒரு நடிகையாக நான் எவ்வளவு காலத்திற்கு நடிக்க முடியும். சில ஆண்டுகள்தான் அதில் நடிகையாக நிலைத்திருக்க முடியும். ஆனால் அதுவே ஒரு நிரந்தரமான ஒரு படிப்பும் தொழிலும் அமைந்துவிட்டால் படங்களில் இருந்து வெளியே வந்த பிறகும் தன்னோடு தான் சுயமாக இருக்கலாம் என்பது இவரது நம்பிக்கை.
 
 
தற்போது சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

மஞ்சக்காட்டு மைனா காயத்ரி ஜெயராம் இப்போ எப்படி இருக்கார் பாருங்க..! - ஷாக் ஆகிடுவீங்க..! மஞ்சக்காட்டு மைனா காயத்ரி ஜெயராம் இப்போ எப்படி இருக்கார் பாருங்க..! - ஷாக் ஆகிடுவீங்க..! Reviewed by Tamizhakam on February 22, 2021 Rating: 5
Powered by Blogger.