"முதல் படம் முதல் நாள் சூட்டிங்கில் ரொம்ப சின்ன ட்ரெஸ் குடுத்தாங்க.. - அப்போ..." - ஓப்பனாக கூறிய ஷகீலா.!

 
கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக திரைத்துறையில் நடித்து வருபவர் ஷகிலா.தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளிலும் நடித்துள்ள இவரது வாழ்க்கை ‘ஷகிலா’ என்ற பெயரில் திரைப்படமாக உருவாக்கப்பட்டுள்ளது. 
 
கன்னட இயக்குநர் இந்திரஜித் லோகேஷ் இயக்கியிருக்கும் இத்திரைப்படத்தில் ரிச்சா சத்தா, பங்கஜ் திரிபாதி, எஸ்தர் நொரான்கா, ராஜீவ் பிள்ளை, ஷீவா ரானா, கஜோல் சக் மற்றும் சந்தீப் மலானி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 
 
நேரடியாக இந்தி மொழியில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம் ஒரே நேரத்தில் தமிழ், கன்னடம், தெலுங்கு மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு கடந்த டிசம்பர் 25ம் ரிலீஸ் ஆனது. 
 
தன்னுடைய வாழக்கை படமாக வெளியாகியுள்ள இந்நிலையில், நடிகை ஷகீலா தன்னுடைய முதல் படம் பற்றிய அனுபவங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.அவர் கூறியதாவது, என்னுடைய முதல் படம், சில்க் ஸ்மிதா ஹீரோயினாக நடித்த ‘ப்ளே கேர்ள்ஸ்'. 
 
இந்த படத்தின் டைரக்டர் என்னைப் பார்த்த மாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார். மேலும், எனக்கு சில்க் உடன் இருக்கும் பெண் கேரக்டர். இருபதாயிரம் ரூபாய் சம்பளம். 
 
நான் நடிக்க போறேன் என்று எனக்கு துணையாக என்னுடன் வந்திருந்த என் தங்கையை பார்த்த இயக்குனர், அவளுக்கும் ஒரு கேரக்டர் கொடுத்தார். அவளுக்கும், இருபதாயிரம் ரூபாய் சம்பளம். 

 
எனக்கு ஒன்றுமே புரியவில்லை. எங்க குடும்ப கடன் பிரச்சனையில் தத்தளித்து கொண்டிருந்த நேரம் அது. என்னால், நம்பவே முடியலவில்லை. இனி நம் குடும்பத்துக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்று முடிவு பண்ணிட்டேன். 
 
முதல் நாள் ஷூட்டிங் போனப்போ ரொம்ப சின்ன டிரஸ்ஸா கொடுத்தாங்க. அப்போ, எனக்கு வெட்கமா போயிடுச்சு. போட முடியாதுன்னுட்டு நின்னேன். ‘ஒண்ணும் தப்பில்லைம்மா. அங்கே சில்கைப் பாரு'ன்னு தூரமா உட்கார்ந்திருந்த சில்கைக் காமிச்சாங்க. 
 
அவங்க என்னைவிடக் கம்மியான டிரஸ்ல உட்கார்ந்திருந்தாங்க. சரி, இங்கே இதெல்லாம் சகஜம்னு முடிவெடுத்துட்டேன். அப்புறம் வரிசையா படங்கள் பண்ணேன். என்று தன்னுடைய முதல் பட அனுபவம் குறித்து வெளிப்படையாககூறியுள்ளார் ஷகீலா.

"முதல் படம் முதல் நாள் சூட்டிங்கில் ரொம்ப சின்ன ட்ரெஸ் குடுத்தாங்க.. - அப்போ..." - ஓப்பனாக கூறிய ஷகீலா.! "முதல் படம் முதல் நாள் சூட்டிங்கில் ரொம்ப சின்ன ட்ரெஸ் குடுத்தாங்க.. - அப்போ..." - ஓப்பனாக கூறிய ஷகீலா.! Reviewed by Tamizhakam on February 12, 2021 Rating: 5
Powered by Blogger.