"கதவ சாத்திட்டு பண்ணுங்க..." - ஸ்ருதிஹாசன் லிப்லாக் - தெறிக்கும் வெப் சீரிஸ் காட்சிகள்..!


தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குனர்கள் இயக்கி உள்ள தெலுங்கு லஸ்ட் ஸ்டோரீஸான பிட்ட கதலு ஆந்தாலஜியின் டீஸர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. 
 
சர்வதேச நாடுகளில் ஆந்தாலஜி படங்களை உருவாக்கி ஹிட் அடித்து வந்த நெட்பிளிக்ஸ், இந்தியாவிலும் ஆந்தாலஜி அத்தியாயத்தை தொடங்கி உள்ளது. இந்தியை தொடர்ந்து தெலுங்கிலும் லஸ்ட் ஸ்டோரீஸ் உருவாகப் போவதாகவும், அமலா பால், ஸ்ருதி ஹாசன் நடிக்க உள்ளார்கள் என்றும் தகவல்கள் வெளியாகின. 
 
இந்நிலையில், நெட்ஃபிளிக்ஸ் இந்தியா இன்று பிட்ட கதலு என்ற டைட்டிலில் உருவாகி உள்ள தெலுங்கு லஸ்ட் ஸ்டோரீஸ் டீசரை வெளியிட்டுள்ளது. தற்போது வெளியாகி உள்ள டீஸரில், நான்கு முன்னணி நடிகைகளான அமலா பால், ஸ்ருதி ஹாசன், ஜகபதி பாபு, ஈஷா ரெப்பா மற்றும் லக்‌ஷ்மி மஞ்சு ஆகியோர் நடித்துள்ளனர்.
 
அமேசான் பிரைமில் வெளியான புத்தம் புது காலை ஆந்தாலஜியில் நடித்து அசத்திய ஸ்ருதிஹாசன், நெட்பிளிக்ஸில் உருவாகியுள்ள எக்ஸ் லைஃப் கதையில் லிப் லாக் முத்தமெல்லாம் கொடுத்து இளைஞர்களை சூடேற்றுகிறார். 
 
 
நடிகையர் திலகம் படத்தை இயக்கிய இயக்குநர் அஸ்வின் டெக்னாலஜியை எல்லாம் பயன்படுத்தி இந்த கதையை உருவாக்கி உள்ளார். டிரைலரின் இறுதியில் கதவ சாத்தட்டா என தெலுங்கில் ஸ்ருதிஹாசன் பேசும் வசனம் பரபரப்பை கிளப்பி உள்ளது.