"அருவி" அதிதி பாலனா இது..? - ஸ்லீவ்லெஸ் உடையில் கைகளை தூக்கி போஸ் - ஷாக் ஆன ரசிகர்கள்..!


கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியான ‘அருவி’ திரைப்படம் வித்தியாசமான கதைக்களத்துடன்வெளியானது. இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் உதவியாளராக இருந்த அருண் பிரபு புருஷோத்தமன் அந்தப் படத்தை இயக்கியிருந்தார். 
 
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸின் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரித்திருந்த ’அருவி’ படத்தில் அருவி என்ற கதாபாத்திரத்தில் நடிகை அதிதி பாலன் நடித்திருந்தார். எதேச்சையாக ஒரு பெண்ணின் வாழ்க்கையில் ஏற்படும் நிகழ்வு, அவளை எந்தளவுக்கு ஆளக்குகிறது என்பதை, உணர்வுப்பூர்வமாக படமாக்கியிருந்தார் இயக்குநர். 
 
அருவி கதாபாத்திரத்தில் நடிகை அதிதி பாலன் மிகச் சிறப்பாக நடித்திருந்தார். சிறந்த நடிப்புக்காக பல விருதுகளையும் வாங்கினார். அஜித் நடித்த ’என்னை அறிந்தால்’ படத்தில் த்ரிஷாவின் தோழியாக நடித்திருந்தார் அதிதி. 
 
இருப்பினும் அருவி திரைப்படம் தான் அவருக்கு நல்ல அடையாளத்தைக் கொடுத்தது. இந்நிலையில், அவ்வப்போது ஃபோட்டோஷூட் நடத்தி இணையத்தில் உலவ விடும் நடிகைகள் பட்டியலில், அதிதியும் தற்போது இணைந்துள்ளார். 
 
சில நாட்களுக்கு முன்னால், இணையத்தில் வைரலான ரம்யா பாண்டியனுக்கு, பயங்கர போட்டியாக மஞ்சள் நிற சேலையில் எடுத்த படங்களை, தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு அசத்தினார் அதிதி. 
 
கெளதம் மேனன், விஜய், வெங்கட் பிரபு, நலன் குமாரசாமி ஆகியோர் தனித்தனிக் கதைகளுடன் குட்டி ஸ்டோரி என்கிற படத்தை இயக்கியுள்ளார்கள். இப்படத்தில் விஜய் சேதுபதி, அமலா பால், மேகா ஆகாஷ், அதிதி பாலன், சாக்‌ஷி அகர்வால், வருண் போன்றோர் நடித்துள்ளார்கள். 
 
 
சமீபகாலமாக, பல கதைகள் கொண்ட படங்கள் ஓடிடியில் தான் நேரடியாக வெளியாகின்றன. ஆனால் இப்படம் திரையரங்குகளில் முதலில் வெளியாகிறது. குட்டி ஸ்டோரியை ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். 
 
 
குட்டி ஸ்டோரியில் ஒரு பகுதியை நலன் குமாரசாமி இயக்கியுள்ளார். 4 வருட இடைவெளிக்குப் பிறகு அவர் இயக்கியுள்ள படம் இது. பிரபல நடிகர்கள், பிரபல இயக்குநர்கள் பங்களிப்பில் உருவாகியுள்ள குட்டி ஸ்டோரி படம் பிப்ரவரி 12 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.


 
இந்த ட்ரெய்லரில் ஸ்லீவ் லெஸ் உடையில் கைகளை தூக்கியபடி நச்சென இருக்கும் சில காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதனை பார்த்த ரசிகர்கள், அதிதி பாலனா இது..? என்று அந்த புகைப்படங்களை ஷேரிட்டு வருகிறார்கள்.