"உயிருக்கு உயிரா லவ் பண்ணேன்.. ஆனால்..." - தன்னுடைய மறுபக்கத்தை காட்டிய நடிகை சோனா..!


தமிழ் சினிமாவில் வலம் வந்த கவர்ச்சி நடிகைகளில் சோனாவும் ஒருவர். தமிழில் கடைசியாக பிரசாந்த் உடன் ஜானி படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் அவர் நடித்த படங்கள் எதுவும் தமிழில் ரிலீசாகவில்லை. 
 
ற்போது நடிகர் பிரதாப் போத்தனுடன் இணைந்து சோனா 'பச்சமாங்கா' என்ற மலையாளப் படத்தில் நடித்துள்ளார். கடந்த 2019-ம் ஆண்டின் இறுதியில் தன்னை எங்கே போனீர்கள் என்று கேட்கும் ரசிகர்களுக்காக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்த நடிகை சோனா, இந்த வருடத்தில் 4 படங்களில் நடித்திருக்கிறேன். 
 
12 படங்களை நிராகரித்திருக்கிறேன்.தான் உயிருக்கு உயிராய் காதலித்த இருவருமே தன்னை ஏமாற்றிவிட்டதால் தனக்கு திருமணத்தின் மீது வெறுப்பு ஏற்பட்டதாக பிரபல நடிகை மனம் திறந்து பேசியுள்ளார்.
 
நிம்மதியான நிலையை அடைய வேண்டும் என்று பயணித்து வருகிறேன். பணத்திற்காக ஓட வேண்டிய அவசியமில்லை. முன்பு இருந்தது போல் இல்லாமல் இப்போது முதிர்ச்சியான மனநிலையில் இருக்கிறேன். 
 
குடிப்பதை நிறுத்தி விட்டேன்.என் வாழ்க்கையில் 2 முறை காதல் வந்தது. ஒருவருடன் 6 வருடங்கள் உயிருக்குயிராக பழகினேன். இன்னொருவருடன் 7 வருடங்கள் பழகினேன். அந்த 2 காதலும் தோல்வியில் முடிந்தது.
 
மேலும் எனக்கு 2 கடமைகள் இருக்கிறது. ஒன்று, என் தங்கை திருமணம். இன்னொன்று, ஒன்றுவிட்ட இன்னொரு தங்கையின் திருமணம். அவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க வேண்டும். என் சுயசரிதையை நான் எழுதி முடித்து விட்டேன். 
 
அதில், நிறைய முக்கியமான ரகசியங்கள் உள்ளன. அதை புத்தகமாக வெளியிடுவதற்கு சரியான பதிப்பாளரை தேடி வருகிறேன். ஊரடங்கு சட்டம் அமலில் இருப்பதால், வெளியில் எங்கும் போக முடிவதில்லை. நான்கு சுவர்களை பார்த்தபடி, வீட்டுக்குள்ளேயே இருக்கிறேன். இப்போதைக்கு அந்த 4 சுவர்கள்தான் என் நண்பர்கள்.

"உயிருக்கு உயிரா லவ் பண்ணேன்.. ஆனால்..." - தன்னுடைய மறுபக்கத்தை காட்டிய நடிகை சோனா..! "உயிருக்கு உயிரா லவ் பண்ணேன்.. ஆனால்..." - தன்னுடைய மறுபக்கத்தை காட்டிய நடிகை சோனா..! Reviewed by Tamizhakam on February 08, 2021 Rating: 5
Powered by Blogger.