அந்த கேள்வியை எழுப்பிய நெட்டிசன் - மியா கலிஃபா கொடுத்த பதிலடி..!


திரைப்பிரபலங்கள் அவ்வப்போது டிரோல்களில் சிக்கும்போது, நெட்டிசன்கள் அடிக்கும் கமெண்டுகளுக்கு காரசாரமான பதிலடியை கொடுப்பார்கள். ஆனால், மியா கலிஃபாவின் பதிலடி சற்று வித்தியாசமாக இருந்ததை பலரும் பாராட்டி வருகின்றனர். 
 
டெல்லி எல்லையில் இரண்டு மாதங்களுக்கும் மேலாக போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக மியா கலிஃபா, ரிஹானா, கிரேட்டா தன்பெர்க் ஆகியோர் பதிவிட்ட ட்வீட், இந்தியா மட்டுமல்லாது உலகளவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. 
 
அவர்களைத் தொடர்ந்து பலரும் இந்தியாவில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக குரல்களை எழுப்பி வருகின்றனர். அதேவேளையில், இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக ட்வீட் போட்ட மியா கலிஃபா, ரிஹானா உள்ளிட்டோருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய திரைப் பிரபலங்களும், கிரிக்கெட் வீரர்களும் களத்தில் குதித்து ட்வீட் போட்டு வருகின்றனர்.
 
இதனால் கடந்த இரண்டு நாட்களாக ட்விட்டரில் காரசாரமான விவாதங்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக, ரிஹானா, மியா கலிஃபா உள்ளிட்டோரின் ட்வீட்களுக்கு அவர்களின் ட்விட்டர் பக்கத்தில் சென்று எதிர்வினையாற்றி வருகின்றனர். 
 
அப்படி, மியா கலிஃபா போட்ட ட்வீட் ஒன்றுக்கு பதில் அளித்த நெட்டிசன் ஒருவர், உங்களால், உங்கள் முன்னோர்கள் எவ்வளவு பெருமைப்படுவார்கள்? என கிண்டலாக கேள்வி எழுப்பினார். 
 

 
நெட்டிசனின் கேள்விக்கு பதில் அளித்த கலிஃபா, தன் தாய் தேசமான லெபனான் நாட்டு செஞ்சிலுவை சங்கத்துக்கு 5,000 அமெரிக்க டாலரை நன்கொடையாக அளித்த வங்கி பரிவர்த்தனையின் புகைப்படத்தைப்போட்டுள்ளார். 
 
அதன் கீழ் , இதற்காக என் முன்னோர்கள் முன்பை விட கொஞ்சம் நிம்மதியாக இருப்பார்கள் எனத் தெரிவித்துள்ளார். மியா கலிஃபாவின் இந்த பதிலடி பலரையும் ரசிக்க வைத்துள்ளது.

அந்த கேள்வியை எழுப்பிய நெட்டிசன் - மியா கலிஃபா கொடுத்த பதிலடி..! அந்த கேள்வியை எழுப்பிய நெட்டிசன் - மியா கலிஃபா கொடுத்த பதிலடி..! Reviewed by Tamizhakam on February 05, 2021 Rating: 5
Powered by Blogger.