‘சின்ன வீடா வரட்டுமா, பெரிய வீடா வரட்டுமா…’ – நடிகை தேஜாஸ்ரீ இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க..!

 
நடிகர் அர்ஜுன் நடிபில் வெளியான ஒற்றன் படத்தில், ‘சின்ன வீடா வரட்டுமா, பெரிய வீடா வரட்டுமா…’ என்ற பாடலுக்கு நடனமாடி, பிரபலமானார்.
 
தொடர்ந்து, பல படங்களில், அதே போல ஒற்றைப் பாடலுக்கு, கவர்ச்சி நடனம் ஆடினார். மும்பை மாநிலம் மஹாராஷ்ராவில் பிறந்த இவரது உண்மையான பெயர் சோனாளி ஜெய் குமார்.இவரது தந்தை கோபி கிருஷ்ண என்பவர் காஷ்மிர் பண்டித் இனத்தை சார்ந்தவர். 
 
நடிகை தேஜா ஸ்ரீ மஹாராஷ்டிரவில் பிறந்து வளர்ந்து பின்னர் மாடலிங் துறையில் ஈடுபட்டார்.இடையில் வாய்ப்புகள் தரை தட்டி நின்றன. 
 
மாடலிங் துறையில் இருந்த போது சென்னை சில்க்ஸ் விளம்பரத்தில் நடிக்க வாய்பு கிடைத்தது அதன் பின்னர் ஒற்றன் படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் நுழைந்தார். 
 
மஹாராஷ்டிரவில் பிறந்தாலும் இவருக்கு தமிழ் நன்றாக தெரியும் மேலும் ஹிந்தி, மராத்தி,தெலுங்கு என்று பல மொழி படங்களில் நடித்தாலும் தமிழில் தான் இவர் அதிகப்படியான படங்களில் நடித்துள்ளார். 
 
 
ஒற்றன் படத்திற்கு பிறகு ஒரு சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்திருந்தார்.2004 விஜய் நடித்த மதுர படத்தில் அவருடன் ஒரு பாடலுக்கு ஆடியதுடன் அந்த படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். தற்போது, மராத்திய படங்களில் நடித்து வருகிறார்.


இது குறித்து, தேஜாஸ்ரீ கூறுகையில், ”இப்போது, மராத்திய திரையுலகில், முக்கிய நாயகியாக வலம் வருகிறேன். விரைவில், தமிழ்த் திரையுலகில், மீண்டும் நுழைந்து, முத்திரை பதிப்பேன்,” என்றார்.

‘சின்ன வீடா வரட்டுமா, பெரிய வீடா வரட்டுமா…’ – நடிகை தேஜாஸ்ரீ இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க..! ‘சின்ன வீடா வரட்டுமா, பெரிய வீடா வரட்டுமா…’ – நடிகை தேஜாஸ்ரீ இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க..! Reviewed by Tamizhakam on February 20, 2021 Rating: 5
Powered by Blogger.