அப்பா, அண்ணன், தனக்கு "முருகன்" பெயர் - இப்போது, தன் புள்ளைக்கும் முருகன் பெயர் சூட்டிய கார்த்தி..!


பிரபல நடிகராக இருக்கும் கார்த்தி - ரஞ்சனி தம்பதியினருக்கு பிறந்த ஆண் குழந்தைக்கு முருகன் பெயரை சூட்டி இருக்கிறார்கள். பருத்திவீரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் கார்த்தி. 
 
முதல் படத்திலேயே முத்திரை பதித்த அவர், தொடர்ந்து பையா, தீரன் அதிகாரம் ஒன்று, கைதி, மெட்ராஸ் என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகராக உயர்ந்தார்.
 
இவர் கடந்த 2011-ம் ஆண்டு ரஞ்சனி என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். இந்த தம்பதிக்கு கடந்த 2013ம் ஆண்டு உமையாள் என்ற பெண் குழந்தை பிறந்தது. அதையடுத்து சுமார் 7 ஆண்டுகள் கழித்து கடந்த அக்டோபர் மாதம் கார்த்தி - ரஞ்சனி தம்பதினருக்கு ஆண் குழந்தை பிறந்தது. 
 
தற்போது குழந்தைக்கு ‘கந்தன்’ என்று முருக கடவுளின் பெயரை சூட்டி இருக்கிறார். மேலும் சமூக வலைத்தளத்தில் ‘கண்ணா, அம்மாவும், அக்காவும், நானும் உனக்கு மிக ஆசையாக "கந்தன்" என்று பெயர் சூட்டி இருக்கிறோம். 
 
உன் வருகையால், நம் சுற்றம் மேலும் இனிமையாகட்டும். அன்புடன்... அப்பா’ என்று பதிவு செய்திருக்கிறார். இதற்கு ரசிகர்கள் வாழ்த்துகளை கூறி வருகிறார்கள்.
 

தன்னுடைய அப்பா சிவக்குமார் ( சிவனின் குழந்தை), அண்ணன் சரவணன் (சூர்யாவின் இயற்பெயர்), தன்னுடைய பெயர் கார்த்தி, இப்படி எல்லாமே முருகனின் பெயர் இந்நிலையில் தன்னுடைய குழந்தைக்கும் முருகன் பெயரையே சூட்டி மகிழ்ந்துள்ளார் கார்த்தி.

அப்பா, அண்ணன், தனக்கு "முருகன்" பெயர் - இப்போது, தன் புள்ளைக்கும் முருகன் பெயர் சூட்டிய கார்த்தி..! அப்பா, அண்ணன், தனக்கு  "முருகன்" பெயர் - இப்போது, தன் புள்ளைக்கும் முருகன் பெயர் சூட்டிய கார்த்தி..! Reviewed by Tamizhakam on March 17, 2021 Rating: 5
Powered by Blogger.