"ட்ரெஸ் இல்லாம போட்டோ போடுங்க.." என்று கேட்ட ரசிகர் - ப்ரியாமணி செருப்படி பதில்..! - என்ன பொசுக்குன்னு இப்படி சொல்லிப்புட்டாங்க..!

 
மாடலிங் என்ற துறையை தன் பள்ளிபருவத்தில் துவங்கி பின் சினிமாவில் நடிக்க வந்தவர் தான் பிரியா வாசுதேவ் மணி என்கிற பிரியாமணி.தென்னிந்திய அனைத்து மொழி படங்களில் நடித்துள்ளார் மற்றும் பாலிவுட் பக்கமும் சென்றார் பிரியாமணி. 
 
தன் திரையுலக வாழ்க்கையை தெலுங்கு சினிமாவில் துவங்கினார் பிரியாமணி. தமிழில் இயக்குனர் பாலு மகேந்திரா இயக்கிய அது ஒரு கனா காலம் திரைப்படத்தில் நடித்தார் இப்படம் இவருக்கு தமிழில் நல்ல வரவேற்பைப் பெற்று தந்தது. 
 
பின்னர் இவர் நடித்த தெலுங்கு திரைப்படம் பெல்லைனா கொத்தாலு ஹிட் ஆக இவருக்கு வரிசையாக மூன்று படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதன் பின் தமிழில் இவர் நடித்த பருத்திவீரன் திரைப்படம் தமிழில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. 
 
இதில் நடிகர் சிவகுமாரின் இரண்டாவது மகன் கார்த்தி அறிமுகமானார்.இப்படத்தில் பிரியாமணியின் ஆகச்சிறந்த நடிப்பால் இவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது வழங்கப்பட்டது. மற்றும் தமிழ்நாடு அரசு சார்பில் ஒரு விருதும் இவருக்கு வழங்கப்பட்டது. 
 
பின்னர் பல கன்னட மற்றும் தெலுங்கு மொழி படங்களில் அதிகம் நடித்தார் பிரியாமணி.தற்போது தெலுங்கில் நடிகர் வெங்கடேஷ் நடிக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் என்ற செய்தி ஒன்று உலா வருகிறது. இப்படம் தமிழில் பெரும் வெற்றி பெற்ற அசுரன் படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.
 
தற்போது பிரியாமணி ஒரு குட்டை பாவாடையுடன் இருப்பது போன்ற புகைபடங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. சமீபத்தில் ஒரு நடன நிகழ்ச்சியில் அவர் இது போன்ற உடையணிந்து கவர்ச்சி நடனம் ஆடியுள்ளார்.
 
இந்நிலையில், தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் படு மோசமான கவர்ச்சி உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டார். இதனை பார்த்த ரசிகர் ஒருவர், ட்ரெஸ் இல்லாமல் இருக்கும் புகைப்படத்தை அனுப்புங்க என்று கேட்க "முதலில் உன் சகோதரிகளிடம், அம்மாவிடம் கேள். அவர்கள் போஸ்ட் செய்தால் நான் என்னுடைய புகைப்படத்தை போஸ்ட் பண்றேன்" என்று நச்சென பதிலடி கொடுத்துள்ளார்.  
இன்னொரு ரசிகர், என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று கேட்க, எனக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லை. என் கணவரிடம் அனுமதி கேளுங்கள். அவருக்கு ஒகே என்றால் நான் உங்களை திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

"ட்ரெஸ் இல்லாம போட்டோ போடுங்க.." என்று கேட்ட ரசிகர் - ப்ரியாமணி செருப்படி பதில்..! - என்ன பொசுக்குன்னு இப்படி சொல்லிப்புட்டாங்க..! "ட்ரெஸ் இல்லாம போட்டோ போடுங்க.." என்று கேட்ட ரசிகர் - ப்ரியாமணி செருப்படி பதில்..! - என்ன பொசுக்குன்னு இப்படி சொல்லிப்புட்டாங்க..! Reviewed by Tamizhakam on March 31, 2021 Rating: 5
Powered by Blogger.