வந்தாச்சு "வலிமை" அப்டேட் - வெளியான ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதி..! - ரசிகர்கள் கொண்டாட்டம்..!


இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் அஜித் நாயகனாக நடிக்கும் படம் 'வலிமை'. இப்படம் ஆரம்பமாகி இதுவரையிலும் எந்தவிதமான அதிகாரப்பூர்வ புகைப்படங்களோ, போஸ்டர்களோ வெளியாகவில்லை. கடந்த சில மாதங்களாகவே அஜித் ரசிகர்கள் சம்பந்தமில்லாத இடங்களில் கூட 'வலிமை அப்டேட்' கேட்டார்கள். 
 
பிரதமரின் சென்னை விஜயம், சென்னையில் நடந்த டெஸ்ட் போட்டி, சமயங்களின் போதும் இந்த 'வலிமை அப்டேட்' கேட்டது சர்ச்சையானது. தான் நடித்துவரும் வலிமை திரைப்படம் பற்றிய தகவல்கள் பலரிடமும் தன் ரசிகர்கள் கேட்டுவருவது தன்னை வருத்தமடையச் செய்வதாக அஜீத்குமார் கண்டனம் தெரிவித்திருக்கிறார். 
 
அந்தத் திரைப்படம் குறித்து உரிய நேரத்தில் தகவல்கள் வெளிவருமென அவர் கூறியிருக்கிறார். இது தொடர்பாக அஜித் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "கடந்த சில நாட்களாக என் ரசிகர்கள் என்ற பெயரில் நான் நடித்திருக்கும் வலிமை சம்பந்தப்பட்ட அப்டேட்ஸ் கேட்டு அரசு, அரசியல், விளையாட்டு மற்றும் பல்வேறு இடங்களில் பலர் செய்துவரும் செயல்கள் என்னை வருத்தமுறச் செய்கின்றன. 
 

முன்னரே அறிவித்தபடி படம் குறித்த செய்திகள் உரிய நேரத்தில் வரும். அதற்கான காலத்தை, நேரத்தை நான் தயாரிப்பாளருடன் ஒருங்கிணைந்து நிர்ணயம் செய்வேன். அதுவரை பொறுமையுடன் காத்திருக்கவும். உங்களுக்கு சினிமா ஒரு பொழுதுபோக்கு மட்டுமே. 
 
எனக்கு சினிமா ஒரு தொழில். நான் எடுக்கும் முடிவுகள் என் தொழில் மற்றும் சமூக நலன் சார்ந்தவை. நம் செயல்களே சமூகத்தில் நம் மீது உள்ள மரியாதையைக் கூட்டும். இதை மனதில் கொண்டு ரசிகர்கள் பொது வெளியிலும் சமூகவலைதளங்களிலும் கண்ணியத்தையும் கட்டுப்பாட்டையும் கடைப்பிடிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றேன். 
 
என் மேல் உண்மையான அன்பு கொண்டவர்கள் இதை உணர்ந்து செயல்படுவார்கள் என நம்புகிறேன்" என்று அஜித் அறிக்கை வெளியிட்டார். இந்நிலையில், 'வலிமை' படத்தின் படப்பிடிப்பு இன்னும் பத்து, பதினைந்து நாட்கள் மட்டும்தான் நடக்க வேண்டி உள்ளதாம். 
 
அதை நடத்தி முடித்துவிட்டால் மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து விடுமாம். ரசிகர்களின் தொடர்ச்சியான தொந்தரவை அடுத்து விரைவில் படத்தின் அப்டேட் ஒன்றைக் கொடுக்கத் தயாராகிவிட்டது படக்குழு. 
 
அதன் படி ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வரும் 11-ம் தேதி மாலை வெளியாக உள்ளது என படக்குழுவிற்கு நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன. 'வலிமை' என்ற டைட்டிலுக்கேற்ப அது அதிரடியாக இருக்கும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

வந்தாச்சு "வலிமை" அப்டேட் - வெளியான ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதி..! - ரசிகர்கள் கொண்டாட்டம்..! வந்தாச்சு "வலிமை" அப்டேட் - வெளியான ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதி..! - ரசிகர்கள் கொண்டாட்டம்..! Reviewed by Tamizhakam on March 02, 2021 Rating: 5
Powered by Blogger.