"எனக்கு அதுக்கெல்லாம் நேரமில்லை..." - கீர்த்தி சுரேஷ் ஓப்பன் டாக்..!


திருமணம் செய்து கொள்வதற்கு எனக்கு இப்போதைக்கு நேரம் இல்லை என்றும் என்னுடைய திருமண செய்தியை பரப்புவதற்கு பதில் தயவு செய்து நல்ல விஷயங்களை பொதுமக்களுக்கு பரப்புங்கள் என்றும் கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார். 
 
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களிலும் ஒரு சில இணைய தளங்களிலும் கீர்த்தி சுரேஷ் ஒரு தொழிலதிபரை திருமணம் செய்ய இருப்பதாக ஒரு வதந்தி பரவி வருகிறது. 
 
இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சமீபத்தில் பேட்டியளித்த கீர்த்தி சுரேஷ் தனக்கு இப்போதைக்கு திருமணம் குறித்த எண்ணம் எதுவும் இல்லை என்றும் திருமணம் செய்வதற்கு தனக்கு நேரம் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
ரஜினிகாந்த் உடன் ‘அண்ணாத்த’, செல்வராகவன் நடித்து வரும் ‘சாணிக்காகிதம்’ ஆகிய இரண்டு தமிழ் படங்களில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் 2 தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார் என்பதும் விரைவில் அவர் ஒரு பாலிவுட் படத்திலும் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
கீர்த்தி சுரேஷ்க்கு தொழிலதிபருடன் திருமணம் என்று கடந்த சில நாட்களாக வதந்தி பரவி வந்த நிலையில் அந்த வதந்திக்கு அவரது இந்த பேட்டி முற்றுப்புள்ளி வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இளம் கதாநாயகியாக இருந்து தற்போது தென்னிந்திய அளவில் முன்னணி கதாநாயகியாகவும், தேசிய விருது வென்ற நடிகையாகவும் விளங்கி வருகிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்

"எனக்கு அதுக்கெல்லாம் நேரமில்லை..." - கீர்த்தி சுரேஷ் ஓப்பன் டாக்..! "எனக்கு அதுக்கெல்லாம் நேரமில்லை..." - கீர்த்தி சுரேஷ் ஓப்பன் டாக்..! Reviewed by Tamizhakam on March 17, 2021 Rating: 5
Powered by Blogger.