"வெல்லப்போவது யார்..?" - தற்போதைய கள நிலவரம்..! - தேர்தல் அறிக்கைக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள்..!


தமிழக தேர்தல் களம் உச்சக்கட்ட பரபரப்பில் சென்று கொண்டிருக்கிறது.தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 2-ஆம் தேதி நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. 
 
இந்த நாளைத் தான் அரசியல் கட்சிகள் மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றன. தமிழக சட்டமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற தஆளும் அதிமுக தலைமையிலான கூட்டணி , எதிர்கட்சியான திமுக தலைமையிலான கூட்டணி ஆகிய இரு பெரிய கட்சிகளும் பெரிதும் முயற்சித்து வருகிறது. 
 
அதேசமயம் தமிழகத்தின் தலையெழுத்தையே மாற்றிக் காட்டுகிறோம் என்று அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் களம் கண்டுள்ளன. எங்களின் நல்லாட்சி தொடர ஓட்டுப் போடுங்கள் என்கிறது அதிமுக கூட்டணி. 
 


தேர்தல் பிரச்சாரம் உச்சகட்டத்தில் இருக்கும் நிலையில், தமிழக மக்களின் நாடித் துடிப்பை கண்டறிந்து சொல்லும் வகையில் கருத்துக்கணிப்பு முடிவுகள் அவ்வப்போது வெளியாகி பரபரப்பை கூட்டுகின்றன. 
 
தேர்தல் அறிக்கைக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் திமுக வெற்றி பெரும் என கூறிய நிலையில், தேர்தல் அறிக்கை வெளியான பின் வரும் கருத்துகணிப்புகள் அதிமுக வெற்றி பெரும் என்று திரும்பியுள்ளது. அரசியல் நோக்கர்கள் பலரும் இதையே தான் கூறுகிறார்கள். 
 
 
எளிதாக வென்றுவிடலாம் என்று கணக்கு போட்டிருந்த திமுகவிற்கு கடும் சவாலாக அதிமுக இருக்கும் என்பது கண்கூடாக தெரிகின்றது. இந்நிலையில், பிரபல தனியார் கருத்து கணிப்பு நிறுவனமான "இண்டியன் டெமாகிரெடிக் நெட்வொர்க்" மற்றும் "உங்கள் குரல்" நிறுவனமும் தேர்தல் அறிக்கைகள் வெளியான பின் மக்கள் மனநிலை என்ன என்று நடத்தியுள்ள  கருத்து கணிப்பு முடிவுகள் தற்போது வெளியிட்டுள்ளது.
 
அதன் படி, 

அதிமுக கூட்டணி - 122 தொகுதிகள்
 
திமுக கூட்டணி - 111 தொகுதிகள்
 
ம.நி.ம கூட்டணி - 0 தொகுதிகள்
 
அமமுக கூட்டணி - 1 தொகுதி
 
நாம் தமிழர் - 0 தொகுதிகள்

இந்த முடிவுகளின் அடிப்படையில் கட்சிகளுக்கு இடையே பெரிய போட்டி களத்தில் நிலவுவது தெரிகின்றது. எந்த கட்சிக்கும் வெற்றி என்பது எளிதாக கிடைக்க கூடியதாக இல்லை. இரு பெரிய கட்சிகளும் கிட்ட தட்ட பாதிக்கு பாதி தொகுதிகளை கைப்பற்ற வாய்ப்புள்ளதை பார்க்க முடிகின்றது.
 

இப்படியே போனால் 2021-ல் தொங்கு சட்டமன்றம் அமையவும் வாய்ப்புள்ளது என்பதே அரசியல் நோக்கர்கள் பலரின் கருத்தாக உள்ளது. இறுதியான மக்கள் முடிவு என்ன என்பதை மே 2-ம் தேதி தெரிந்து கொள்ளலாம்.

"வெல்லப்போவது யார்..?" - தற்போதைய கள நிலவரம்..! - தேர்தல் அறிக்கைக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள்..! "வெல்லப்போவது யார்..?" - தற்போதைய கள நிலவரம்..! - தேர்தல் அறிக்கைக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள்..! Reviewed by Tamizhakam on March 20, 2021 Rating: 5
Powered by Blogger.