"எதிரிக்கு கூட இந்த நிலை வரக்கூடாது டா சாமி..!.." - நடிகர் மோகன் இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க..!


இயக்குனர் பாலு மகேந்திராவால் கன்னட திரையுலகில் அறிமுகமானவர் தான் மைக் மோகன் என்ற மோகன் ராவ். இந்த படம் 175 நாட்கள் ஓட தனது முதல் படத்திலே வெள்ளி விழா கொண்டாடினர் மோகன்.இதன் பின் தென்னிந்திய அணைத்து மொழி படங்களில் நடித்தார் மோகன்.
 
இவருக்கு தமிழில் ஒரு திருப்பு முனையாக அமைந்த திரைப்படம் மூடுபனி. அக்காலத்தில் உச்ச நட்சத்திரங்களான ரஜினி மற்றும் கமல் திரைபடங்களுக்கு நிகராக இவர் திரைப்படம் இருந்தது.
 
'மூடு பனி' என்கிற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் மைக் மோகன். இந்த படத்தை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான, 'நெஞ்சத்தை கிள்ளாதே' திரைப்படம் 365 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. 
 
இதை தொடர்ந்து வெளியான கிளிசல்கள், பயணங்கள் முடிவதில்லை, கோபுரங்கள் செய்வதில்லை போன்ற படங்கள், ஒரு வருடத்திற்கு மிகாமல் ஓடி, தமிழ் சினிமாவில் இவரை நிலைக்க செய்தது. அதன் பின்னர் சக்கை போடு போட்டு தமிழ், தெலுங்கு, கன்னடா, மலையாளம் என அனைத்து மொழிகலும் நடித்தார். 
 

ஒரு நாளில் 18 மணி நேரம் ஷூட்டிங்

 
ஒரு நாளிற்கு 18 மணி நேரம் நடிப்பிலேய தனது நேரத்தை செ லவி ட்டார். கிட்டத்தட்ட 70 படங்களுக்குப் மேல் நடித்து செம்மையாக வாழ்ந்தவர் இவர்மிக குறுகிய காலத்தில் எப்படி முன்னணி இடத்தை இவர் பிடித்தாரா, அதே வேகத்தில் திரையுலகத்தி விட்டும் விலகினார். 
 
இவர் மீது காதல் கொண்ட நடிகை ஒருவர் காதலை வெளிப்படையாக கூறியும் இவர் ஏற்று கொள்ளாததால், இவருக்கு எய்ட்ஸ் நோய் இருப்பதாக கூறி அந்த நடிகை ஜாலியாக திரையுலகிற்கு டாட்டா காட்டிவிட்டு திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார்.
 
 
எந்த வித பின்னணியும் இல்லாமல் நடிக்க வந்த மோகன் சில வருடங்கள் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கும்படி செய்தது அவரது அதிர்ஷ்டம்தான். அவருடைய தெத்துப்பல் புன்னகைத்தான் அந்த அதிர்ஷ்டத்திற்கான வேராக இருக்க முடியும். மோகன் நடிக்க வந்த காலங்களில் பெண்களுக்கு நடிகர் கமல்ஹாசன் மீது க்ரேஸ் இருந்தது. 
 
அதற்கப்புறம் பெண்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் மோகன்தான். நடிகர் மோகனுக்கு அதிர்ஷ்டம் என்பது அவருடைய முதல்படத்தில் இருந்தே நிழலாக பின் தொடர்ந்து வந்திருக்கிறது.திரையுலகில் நல்ல உச்சத்தில் சென்று கொண்டிருந்த நடிகர் மோகன் மீது ஒரு நடிகை மீது காதல்வயப்பட்டார். 
 

காதலை மறுத்ததால் வந்த விணை

 
ஆனால் அவருடைய காதலை மோகன் மறுத்து விட்டார். 90களில் மோகனுக்கு ஜோடியாக நடித்த "பூ" நடிகைதான் என்கிறார்கள். அந்த காலங்களில் எந்த தொலைத்தொடர்பும் தொழில்நுட்பங்களும் இந்த அளவிற்கு இல்லை. இன்றைக்கு ஒருவரைப் பற்றி தவறான செய்து சொன்னால் அந்த நபர் மீது அவதூறு வழக்கு கூட பதிவு செய்யலாம். 
 
 
ஆனால் அன்று அப்படியான ஞானம் யாரிடமும் கிடையாது. அந்த நேரத்தில் தான் காதலை மறுத்ததால் அவமானப்பட்ட அந்த நடிகை திடீரென நடிகர் மோகனுக்கு எய்ட்ஸ் நோய் இருப்பதாக வதந்திகளை பரப்பி விட்டார். அப்போது பத்திரிகைகளில் எழுதுவதுதான் சத்தியம் என்பதால் பலர் அதனை நம்பினார்கள். 


அப்போது எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வும் மக்களுக்கு இல்லாததால் நடிகர் மோகனுடன் சேர்ந்து நடிக்க நாயகிகள் முன்வரவில்லை. இந்த வதந்தியை நம்பி மோகன் வீட்டுக்கு அருகில் இருந்தவர்கள் கூட கதவை சாத்தி கொண்டனராம். 
 
இதனால் விரக்தியின் எல்லைக்கு சென்ற நடிகர் மோகன் வீட்டை விற்று விட்டு சென்று விட்டாராம்.  இந்த விஷயங்களை நடிகர் மோகனே ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.
 

தற்போது என்ன செய்கிறார்..?

 
இப்போது 61 வயதாகும் மோகன் ஆரோக்கியமாகவே இருக்கிறார். நடுவே 2015 வெள்ளத்தின் போது மக்களுக்கு நிவாரணம் வழங்கியவர்களில் நடிகர் மோகனும் ஒருவர். 
 
 
எந்த எதிர்பார்ப்புமின்றி தன்னை நேசித்தவர்கள் வெறுத்தவர்கள் என யோசிக்காமல் ஓடி வந்து அனைவருக்கும் உதவி செய்தார் மோகன். இப்போதும் மோகன் எனும் பெயரைக் கேட்டாலே மீண்டும் அவரைத் திரையில் பார்க்க முடியாதா என பல ரசிகர்கள் மனம் ஏங்கி கொண்டுதான் இருக்கிறது. 
 
வெகு சீக்கிரம் மோகன் மீண்டும் நம் அனைவருக்காகவும் திரைக்கு வர வேண்டும்.

"எதிரிக்கு கூட இந்த நிலை வரக்கூடாது டா சாமி..!.." - நடிகர் மோகன் இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க..! "எதிரிக்கு கூட இந்த நிலை வரக்கூடாது டா சாமி..!.."  - நடிகர் மோகன் இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க..! Reviewed by Tamizhakam on March 01, 2021 Rating: 5
Powered by Blogger.