கீர்த்தி சுரேஷ் உடம்பை பார்த்தால் **** மாதிரி இருக்கு..! - மோசமான கருத்தை கூறிய ஸ்ரீ ரெட்டி..! - விளாசும் ரசிகர்கள்..!


சர்ச்சைகளுக்குப் பேர் போனவர் நடிகை ஸ்ரீரெட்டி. தமிழ் மற்றும் தெலுங்கு திரைப் பிரபலங்கள் மீது பாலியல் புகார் கூறியே பிரபலமானவர். மேல்லாடை இன்றி போராட்டம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தியவர்.
 
சமீபகாலமாக தனிப்பட்ட முறையில் யார் மீதும் பாலியல் புகார் கூறாவிட்டாலும், தொடர்ந்து தனது சமூகவலைதளப் பக்கங்களில் மோசமான பதிவுகளை வெளியிட்டு வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
 
அந்தவகையில் தற்போது வெளியிட்டுள்ள பதிவு ஒன்று நெட்டிசன்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் நடித்த படம் பற்றியும், அவரது உடல் எடையை பற்றியும் கருத்து தெரிவித்து வம்புக்கு இழுத்திருக்கிறார் ஸ்ரீரெட்டி.
 
தெலுங்கு நடிகர்கள், தயாரிப்பாளர்கள் மட்டுமில்லாமல், தமிழ் சினிமாவில் இருக்கும் நடிகர்கள் மீதும் புகார் கூறினார் ஸ்ரீரெட்டி. இவர் அவ்வப்போது தனது பேஸ்புக் பக்கத்தில் சிலரை பற்றி பதிவு செய்து வருவார்.
 
தற்போது நடிகை கீர்த்தி சுரேஷை பற்றி விமர்சித்துள்ளார். அதில், நானும் கீர்த்தி சுரேஷும் ஒரே விமானத்தில் பயணித்தோம். நான் உட்பட யாராலும் கீர்த்தி சுரேஷை அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை.
 
என்னிடம் பலர் செல்பி எடுத்துக்கொண்டனர். உடல் எடை குறித்த பின்னர் கீர்த்தி சுரேஷ் உடம்பை பார்த்தால் நோயாளி போல் இருக்கிறார். அவர் நடித்த மகாநதி படம் இயக்குனரால்தான் சிறப்பாக வந்தது. கீர்த்தி சுரேஷின் திறமையால் அல்ல. தற்போது சாய் பல்லவி மிகவும் சிறப்பாக வளர்ந்து வருகிறார்” என்று கூறியுள்ளார்.
 

இதனை பார்த்த ரசிகர்கள் அவரைகண்டமேனிக்கு கழுவி ஊற்றி வருகிறார்கள்.

கீர்த்தி சுரேஷ் உடம்பை பார்த்தால் **** மாதிரி இருக்கு..! - மோசமான கருத்தை கூறிய ஸ்ரீ ரெட்டி..! - விளாசும் ரசிகர்கள்..! கீர்த்தி சுரேஷ் உடம்பை பார்த்தால் **** மாதிரி இருக்கு..! - மோசமான கருத்தை கூறிய ஸ்ரீ ரெட்டி..! - விளாசும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on March 06, 2021 Rating: 5
Powered by Blogger.