"கோடான கோடி.. அதில் குதிப்போம் விளையாடி.." - சரோஜா பட நடிகை நிகிதா இப்போ எப்படி இருக்கார் பாருங்க..!


திருமணமாகி மும்பையில் செட்டிலான பிரபல நடிகை, மீண்டும் நடிக்க வருவதாகக் கூறியுள்ளார். தமிழில், விஷ்ணுவர்தன் இயக்குனராக அறிமுகமான குறும்பு படம் மூலம் தமிழுக்கு வந்தவர் நடிகை நிகிதா. 
 
அல்லரி நரேஷ் ஹீரோவாக நடித்த இந்தப் படத்தில் தியா இன்னொரு ஹீரோயினாக நடித்திருந்தார்.இதையடுத்து சரத்குமார் நடித்த சத்ரபதி, சத்யராஜ், சிபிராஜ் நடித்த வெற்றிவேல் சக்திவேல், வெங்கட்பிரபு இயக்கிய சரோஜா, முரண், கார்த்தி நடித்த அலெக்ஸ் பாண்டியன் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். 
 
இந்தி, தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ள நிகிதா, கடைசியாக போங்கு படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார்.கன்னட பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற இவருக்கு கன்னட தயாரிப்பாளர்கள் சங்கம் மூன்று வருடங்கள் நடிக்க தடை விதித்திருந்தது. 
 
நடிகர் தர்ஷனை, நிகிதா காதலித்ததாகவும் அதனால் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும் தர்ஷன் மனைவி கொடுத்த புகாரை அடுத்து இந்த தடை விதிக்கப்பட்டு இருந்தது.இது அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது. பின்னர் அதற்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்றும் தனது பெயரை கெடுத்து விட்டதாகவும் அப்போது புகார் சொன்னார், நிகிதா. 
 
அவருக்கு ஆதரவாக பலர் குரல் கொடுத்தனர். இதனால் அந்த தடை சில நாட்களில் தயாரிப்பாளர் சங்கத்தால் நீக்கப்பட்டது.கடந்த 2002 ஆம் ஆண்டு ஹிந்தி தொலைக்காட்சி உலகில் ஒளிபரப்பான “ஆட்டி ரஹெங்கி பஹ்ரைன்” என்ற தொடரின் மூலமாக சினிமாவில் நுழைந்தார் நிகிதா துக்ரல்.
 
 
கடைசியாக தமிழில் கடந்த 2013ஆம் ஆண்டு இயக்குநர் சுராஜ் இயக்கத்தில் கார்த்தி, அனுஷ்கா ஷெட்டி, சந்தானம் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான “அலெக்ஸ் பாண்டியன்” படத்தில் நடித்திருந்தார். 
 
அதையடுத்து அவருக்கு தொடர்ந்து பட வாய்க்குள் கிடைக்காததால் சின்ன சின்ன ரோல்களில் தலைகாட்டி வந்தார்.பிறகு ககன்தீப் சிங் என்பவரை கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட நிகிதா, மும்பையில் செட்டிலானார். இவர்களுக்கு ஜாஸ்மிரா என்ற மகள் இருக்கிறார். 
 
 
மகளை கவனித்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக படங்களில் நடிக்காமல் இருந்தார். இந்நிலையில் இப்போது மீண்டும் நடிக்கத் தொடங்கி இருக்கிறார்.கேமரா முன் மீண்டும் வரப்போவதாக சில நாட்களுக்கு முன் தெரிவித்திருந்த அவர், இப்போது வெப்சீரிஸ் ஒன்றில் நடிக்க இருக்கிறார். 
 
தெலுங்கில் உருவாகும் இதில் சிறந்த கேரக்டரில் நடிப்பதாகக் கூறியுள்ளார். சினிமா வாய்ப்பும் வருகிறது. நல்ல கேரக்டர் அமைந்தால் நடிப்பேன் என்று நடிகை நிகிதா தெரிவித்துள்ளார்.


 
இந்நிலையில், தன்னுடைய சமீபத்திய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார் அம்மணி.

"கோடான கோடி.. அதில் குதிப்போம் விளையாடி.." - சரோஜா பட நடிகை நிகிதா இப்போ எப்படி இருக்கார் பாருங்க..! "கோடான கோடி.. அதில் குதிப்போம் விளையாடி.." - சரோஜா பட நடிகை நிகிதா இப்போ எப்படி இருக்கார் பாருங்க..! Reviewed by Tamizhakam on March 05, 2021 Rating: 5
Powered by Blogger.